காய்ச்சல் வந்தால் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் வலி நிவாரணி மாத்திரைகளை
பெற்றுக் கொள்ள வேண்டாமெனவும் இரண்டு நாட்களுக்கு மேல் காய்ச்சல்
நீடிக்குமாயின் நோயாளியை உடனடியாக அரச வைத்தியசாலையில் அனுமதிக்குமாறு
சுகாதார அமைச்சு கேட்டுக் கொண்டுள்ளது.
கடந்த சில நாட்களாக கொழும்பு தேசிய வைத்தியசாலை, லேடி ரிச்வே சிறுவர் வைத்தியசாலை மற்றும் களுபோ வில வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படுவதாக அவ் அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
எனினும் சில நாட்கள் காய்ச்சல் அதிகரிக்கப்பட்டவர்களே இவ்வாறு வைத்திய
சாலையில் அனுமதிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. கொழும்பு ரிச்வே
வைத்தியசாலையில் கடந்த வருடம் 3,631 பேர் டெங்கு நோய்க்கு சிகிச்சை
பெற்றுள்ளதாகவும் அதில் 501 பேருக்கு டெங்கு உறுதியானதாகவும் அதில் 17 பேர்
உயிரிழந்துள்ளதாகவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.கடந்த சில நாட்களாக கொழும்பு தேசிய வைத்தியசாலை, லேடி ரிச்வே சிறுவர் வைத்தியசாலை மற்றும் களுபோ வில வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படுவதாக அவ் அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

0 comments:
Post a Comment