• Latest News

    February 01, 2014

    அமெரிக்க உதவி இராஜாங்கச் செயலாளர் நிஷா தேசாய் பிஷ்வால் நீதி அமைச்சர் ரவூப் ஹக்கிமை சந்தித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்

    இராணுவத்தினர் நிலை கொண்டிருக்கும் பிரதேசங்களில் அவர்கள் பொதுமக்களைச் சென்று கைது செய்வதுண்டா? என அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலாளர் நிஷா தேசாய் பிஷ்வால் நீதியமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீமிடம் வினவியபோது, அதற்குப் பதிலளித்த அவர் பாதுகாப்புப் படையினர் பொதுமக்களைக் கைது செய்வதில்லை என்றும் அத்தாட்சிப்படுத்தப்பட்ட உயர் பொலிஸ் அதிகாரிகளினாலேயே  (Gazzetted Officials)  அவ்வாறான கைதுகள் மேற்கொள்ளப்பட முடியும் என்றும் கூறினார்.
    படையினர் முகாம்களில் முடக்கப்பட்டுள்ளனரா?என எழுப்பப்பட்ட கேள்விக்கு, அவர்கள் முகாம்களிலேயே இருப்பதாகவும்,  அவசியம் கருதி பொலிஸார் கேட்டுக் கொள்ளும் பட்சத்தில் மட்டுமே அவர்கள்  உதவிக்கு அழைக்கப்படுவார்கள் என்றும் அமைச்சர் ஹக்கீம் பதிலளித்தார்.
    இலங்கை வந்த ஐக்கிய அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் உதவிச் செயலாளர் நிஷா தேசாய் பிஷ்வால், பிரதி உதவிச்செயலாளர் அடுல் கெஷாப் மற்றும் அவர்களது குழுவினர் மற்றும் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் மிச்சேல் ஜே.சிஸோன் ஆகியோருடன் அமைசசர் ஹக்கீமை வெள்ளிக்கிழமை (31)மாலை நீதியமைச்சில் சந்தித்துப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.
    சிறையிலுள்ள தமிழ்க்கைதிகளை அவர்களது உறவினர்கள் சென்று பார்வையிடுவது தொடர்பில் அமைச்சரிடம் வினவப்பட்டபொழுது, பயங்கரவாத தடைச்சட்டம் உட்பட வேறு சட்டங்களின் கீழும் சிறைவாசம் அனுபவிக்கும் கைதிகளைச் சந்திப்பதற்கு அவர்களது உற்றார், உறவினர்களுக்கு அனுமதி வழங்கப்படுவதாக நீதியமைச்சர் தெரிவித்தார்.   
    பெண்கள் சம்பந்தமான பால்சார் (Gender Based)   வன்முறையைப் பொறுத்தவரை வன்புணர்ச்சி போன்ற பாரதூரமான குற்றங்களுக்கு தற்போதுள்ள சட்டத்தில் கூடுதல் தண்டணை வழங்க்ககூடிய விதத்தில் திருத்ங்கள் மேற்கொள்ளப்படவுள்ளதாக உதவிச் செயலாளர் நிஷா தேசாய் கேட்ட மற்றுமொரு கேள்விக்குப் பதிலளிக்கையில் நீதியமைச்சின் செயலாளர் திருமதி.கமலினி டி சில்வா தெரிவித்தார்.

    டாக்டர்.ஏ.ஆர்.ஏ.ஹபீஸ்
    ஊடகச் செயலாளர்  

      

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: அமெரிக்க உதவி இராஜாங்கச் செயலாளர் நிஷா தேசாய் பிஷ்வால் நீதி அமைச்சர் ரவூப் ஹக்கிமை சந்தித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top