எஸ்.அஷ்ரப்கான் ;
பொத்துவில் சிரேஷ்ட ஊடகவியலாளர் எஸ்.எம் இப்றாஹிமின் திடீர் மறைவு ஊடகத்துறையினருக்கு மட்டுமல்லாது முழு அம்பாரை மாவட்ட மக்களுக்கும் பேரிழப்பாகுமென இஸ்லாமிய சமூக மேம்பாட்டுக்கான தேசிய அமைப்பின் தலைவர் எஸ்.முபாறக் விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
மரணம் என்பதை எல்லா உயிரினங்களும் சுவைத்தே ஆகவேண்டும்.
ஆனாலும் மக்களுக்காக தங்களை அர்ப்பணித்து சேவைசெய்தவர்களின் இழப்பானது உண்மையில் அம்மக்களுக்கு பேரிழப்பாகும். என்றும், வர்களது சேவை மக்களால் நினைவுகூரப்படும். இஸ்லாமிய அடிப்டையில் மக்களுக்கான நிலையான தர்மம் செய்தவர்கள் பட்டியலில் சிரேஷ்ட ஊடகவியலாளர் மர்ஹூம் இப்றாஹீம் அவர்களையும் இறைவன் பொருந்திக்கொள்ள வேண்டும். மிக எளிமையான ஒருவராக மக்களிடம் தோழமையுடன் இவர் நடந்து கொண்டதுடன், பொத்துவில் பிரதேசம் மட்டுமல்லாது ஏனைய தமிழ், முஸ்லிம், சிங்கள மக்களுக்காகவும் பாகுபாடின்றி சேவையாற்றிய ஒருவராகவும் காணப்பட்டார்.மரணம் என்பதை எல்லா உயிரினங்களும் சுவைத்தே ஆகவேண்டும்.
ஊடகத்துறையில் மட்டுமல்லாது அவர் தொழிலுக்காக சேவைசெய்த பல அரச துறைகளிலும் நேர்மையாளராகவும், திறன்படவும், சேவை செய்து மக்களுக்காகவே தமது காலநேரத்தை செலவிட்டவர். இதனால் மக்களின் நன்மதிப்பையும் பெற்றவர்.
மக்கள் தேவைகளை, குறைகளையும் இனம்கண்டு தனது எழுத்துத்துறை என்ற பாரிய பேனாமுனையினால் வெளிக்கொண்டுவந்ததுடன் மக்கள் வேகனாகவும் சேவையாற்றிவந்தார். அதுமட்டுமல்லாமல் பொத்துவில் பிரதேச மாணவர்களின் பிரச்சினைகள், கல்வித்துறைசார் குறைபாடுகளையும் வெளிக்கொண்டுவந்ததனால் துறைசார்ந்த அதிகாரிகளின் ஊடாக தீர்வுகளைப்பெற்றுக்கொடுப்பதற்கும் இவரது ஊடகத்துறைப்பணி மிகவும் பிரயோசனமாக அமைந்திருந்தது.
இவர் தனது இறுதி ஊடகத்துறை சேவைக்காலத்தின்போது ஓய்வுபெற வேண்டிய வயது முதிர்ந்த காலத்திலும் சிறப்பாக சேவை செய்துவந்தார். கடந்த காலத்தில் சிறு நோய்வாய்பட்டிருந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தவேளையிலும் தனது ஊடகப்பணியினை வைத்தியசாலைக்கட்டிலில் இருந்துகொண்டு எழுதியிருந்தமையை அப்போது கண்களால் காணக்கூடியதாக இருந்தது. இவை அனைத்தும் உண்மையில் அவரால் மக்களுக்கு செய்யப்பட்ட சேவை என்பதில் மாற்றுக்கருத்திருக்க முடியாது.
இவரது திடீர் மறைவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும், ஊடகசமூகத்தினருக்கும், பொத்துவில் மக்களுக்கும் எமது சங்கம் சார்பாக ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்வதோடு, அன்னாருக்கு உயர்ந்த சுவரக்கம் கிடைக்கவும் பிரார்த்திப்போமாக, என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது

0 comments:
Post a Comment