• Latest News

    March 12, 2014

    அம்பாறை மாவட்ட அபிவிருத்தி தொடர்பாக அறிவுறுத்தும் கூட்டம்

    சுலைமான் றாபி;
    பொருளாதார அபிவிருத்தி செயத்திட்டங்களை இலக்காகக் கொண்டு  அம்பாறை மாவட்ட அபிவிருத்தி தொடர்பாக அறிவுறுத்தும் கூட்டமொன்று இன்று 2014.03.11அம்பாறை எச்.எம். வீரசிங்க மைதானத்தில் நடைபெற்றது.பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஸில் ராஜபக்ஷ தலைமையில் இடம் பெற்ற இக்கூட்டத்தில் 2014ம் வருடத்திற்காக அம்பாறை  மாவட்டத்தில் மேற்கொள்ளப்படவுள்ள அபிவிருத்திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடுகள் தொடர்பாக அறிவுறுத்துவதற்காகவே  இடம்பெற்றது. 

    இந்த கூட்டத்தில் அமைச்சர்களான பீ.தயாரட்ன, ஏ.எல்.எம்.அதாவுல்லா, பிரதியமைச்சர் சரத் வீரசேகர பாராளுமன்ற உறுப்பினர்களான எச்.எம்.எம்.ஹரீஸ், பைசால் காசிம், ஷிரியானி விஜயவிக்ரம, பீ.எச்.பியசேன, எம்.ரீ.ஹஸனலி, கிழக்கு மாகாண ஆளுநர் ரியர்அட்மிரல் மொகான்விஜயவிக்ரம, அம்பாறை  மாவட்ட அரசாங்க அதிபர் திரு. அல்விஸ், மாகாண சபை அமைச்சர்கள் மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள், அரச உத்தியோகத்தர்கள் உட்பட பலரும்
    கலந்து கொண்டனர்.



     
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: அம்பாறை மாவட்ட அபிவிருத்தி தொடர்பாக அறிவுறுத்தும் கூட்டம் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top