• Latest News

    March 12, 2014

    தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் 'தேவட்ட' இசை இரவு

    எம்.வை.அமீர் ;
    இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் பிரயோக விஞ்ஞான பீட மைதான முற்றலில் 2014-03-11 மாலை பல்கலைக்கழக இரண்டாம் மற்றும் முதலாம் வருட மாணவர்கள் ஒன்றிணைந்து 'தேவட்ட' என்ற தொனிப்பொருளில், முற்றிலும் சிங்கள பாரம்பரிய இசை மற்றும் கலைகளை நினைவு கூறக்கூடிய வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
     

    இந்நிகழ்வில் பிரதம அதிதியாக தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் பிரயோக விஞ்ஞான பீட கணிதத்துறை தலைவர் கலாநிதி எச்.எம்.எம்.நளீர் அவர்களும் விசேட அதிதிகளாக பௌதிகதுறைத் தலைவர் கலாநிதி ஆர்.செந்தில்நிதி, சிரேஷ்ட மாணவ வழிகாட்டல் தலைவர் கலாநிதி கே.கோமதி, சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி எம்.எச்.ஹாறுன் போன்றோருடன் தென்கிழக்கு பல்கலைக்கழக சிங்கள சாஹித்திய சங்க ஆலோசகர் சிரேஷ்ட விரிவுரையாளர் அமரசிறி விக்கிரமரத்ன அவர்களும் கலந்து கொண்டனர்.

    'தேவட்ட'  என்ற இரு வேலிகளுக்கிடையிலான நடைபாதை எனும் கருத்துப்பட ஒழுங்கமைக்கப்பட்டு நடைபெற்ற இந்த இசை நிகழ்வில் சிரேஷ்ட விரிவுரையாளர் அமரசிறி விக்கிரமரத்ன சிங்கள பாரம்பரிய இசையுடன் சம்மந்தப்படுத்தி இசையுடன் கூடிய சொற்பொழிவு ஒன்றை நிகழ்வு முடியும்வரை நிகழ்த்திச்சென்றார். சம்மாந்துறையில் அமையப்பெற்றுள்ள பிரயோக விஞ்ஞான பீட மைதான முற்றலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் ஒலுவில் வளாகத்தில் இருந்தும் பெரும்திரளான சிங்கள மாணவர்கள் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.






    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் 'தேவட்ட' இசை இரவு Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top