ஹைலெவல் வீதியினூடான வாகன போக்குவரத்து தற்போது வழமைக்கு திரும்பியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஹைலெவல் வீதியில் இன்று (16) காலை முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் காரணமாக அங்கு பதற்ற நிலை ஏற்பட்டதுடன் வாகன போக்குவரத்தும் தடைப்பட்டது.
இந்நிலையில் இரத்தினபுரி மற்றும் அவிசாவளையில் இருந்து கொழும்பு நோக்கி
செல்லும் வாகன சாரதிகள் இங்கிரிய மற்றும் லோ லேவல் வீதிகளை
பயன்படுத்துமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டனர்.
ஹைலெவல் வீதியில் இன்று (16) காலை முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் காரணமாக அங்கு பதற்ற நிலை ஏற்பட்டதுடன் வாகன போக்குவரத்தும் தடைப்பட்டது.
எனினும் ஹைலெவல் வீதியின் ஊடாக தற்போது வாகன போக்குவரத்தை மேற்கொள்ள முடியும் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

0 comments:
Post a Comment