• Latest News

    March 13, 2014

    துப்பாக்கி இருப்பதாக தெரிவிக்கப்பட்ட பொய்யான தகவலினால் பரபரப்பு!

    நிந்தவூர் பிரதேசத்தில் உள்ள வர்த்தக நிலையமொன்றில் துப்பாக்கி இருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து இன்று மாலை சம்மாந்துறை பொலிஸாரினால் தீவிர பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது. ஆயினும், துப்பாக்கி அங்கு இருக்கவில்லை. 119 தொலைபேசி மூலம் தெரிவிக்கப்பட்ட தகவலை அடுத்தே தாங்கள் வருகை தந்ததாக பொலிஸார் தெரிவித்ததாக வர்த்தக நிலையத்தின் உரிமையாளர் தெரிவித்தார். பொலிஸார் தேடுதலையடுத்து இதுவொரு பொய்யான தகவல் என்று தெரிவிக்கப்படுகின்றது.

    குறிப்பிட்ட வர்த்தக நிலையம் நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளரின் சகோதரரின்  என்பது குறிப்பிடத்தக்கது.

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: துப்பாக்கி இருப்பதாக தெரிவிக்கப்பட்ட பொய்யான தகவலினால் பரபரப்பு! Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top