• Latest News

    March 13, 2014

    தேவயானி மீது குற்றச்சாட்டுகள் தள்ளுபடி

    இந்தியாவின் நியுயார்க் துணைத்தூதராக இருந்த தேவயானி கோபார்கடே கைது விவகாரத்தில், அவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களை, நியூயார்க் நீதிமன்றம் ஒன்று தள்ளுபடி செய்திருக்கிறது.

    தேவயானி, அவரது வீட்டுப் பணிப்பெண்ணை இந்தியாவிலிருந்து அழைத்து வர விசாவுக்கு விண்ணப்பித்தபோது, அவருக்குத் தரவிருந்த சம்பளம் பற்றி பொய்யான தகவல் தந்தார், மோசடி செய்தார் என்ற குற்றச்சாட்டுகளின் பேரில் அவர் மீது வழக்கு தொடரப்பட்டது.

    இந்த வழக்கின்போது, தேவயானி கைது செய்யப்பட்டு, நிர்வாணமாக்கி சோதனையிடப்பட்டது, இந்திய அமெரிக்க உறவுகளில் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியது.

    ஆனால் இப்போது, நியுயார்க்கில் உள்ள மான்ஹாட்டன் மாவட்ட நீதிமன்றம், அவர் மீது குற்றச்சாட்டுகள் பதியப்பட்டபோது, அவருக்கு குற்றங்கள் பதியப்படுவதிலிருந்து ராஜீயப் பாதுகாப்பு இருந்தது என்று தீர்ப்பளித்திருக்கிறது.

    அவர் மீது நிலுவையில் இருந்த பிடியாணையையும், தேவயானி மீது விதிக்கப்பட்டிருந்த ஜாமின் நிபந்தனைகளையும் நீதிமன்றம் ரத்து செய்தது.

    இத்தீர்ப்பை , தேவயானி, தனது வழக்கறிஞர் மூலம் வரவேற்றிருக்கிறார். அவரது தந்தை உத்தம் கோபர்கடேயும் இத்தீர்ப்பை வரவேற்று இந்திய வெளியுறவுத்துறைக்கு நன்றி தெரிவித்திருக்கிறார்

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: தேவயானி மீது குற்றச்சாட்டுகள் தள்ளுபடி Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top