ஊடகக் கலந்துரையாடலுக்குச் சென்ற கிழக்கு
மாகாண மூன்று இனங்களையும் சேர்ந்த ஊடகவியலாளர்களை பொதுபலசேன அமைப்பு
தடுத்தி நிறுத்தி திருப்பி அனுப்பிய சம்பவம் ஒன்று நேற்று முன் தினம் பொலநறுவையில் நிகழ்ந்துள்ளது.
இச்சம்பவம் தொடர்பல் மேலும் அறியவருவதாவது,
கிழக்கு மாகாணத்திலுள்ள அம்பாறை,
மட்டக்களப்பு, திருகோணமலை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த தமிழ், முஸ்லிம்,
மற்றும் சிங்கள ஊடகவியலாளர்கள் 30 பேரை தெரிவு செய்து கிழக்கு மாகாண
ரீதியில் ஒரு
மீடியா போரம் அமைப்பதற்கும் மற்றும் இன நல்லுறவை ஏற்படுத்தி
ஊடகவியலாளர்களிடையே ஒரு பரஸ்பர நட்புறவினைப் பேணி ஒத்துழைப்புடன்
கடடையாற்றுவதற்குமாக பொலநறுவையில் அமைந்துள்ள நட்சத்திர ஹொட்டலான சுது
அரலிய கொட்டலுக்கு நேற்றயத்தினம் பிரபல அரச சார்பற்ற அமைப்பு ஒன்றினால்
அழைக்கப்பட்டிருந்தனர்.
கிழக்கிலுள்ள மூன்று மாவட்டங்களிலிருந்தும்
வருகைதந்த மூவின ஊடகவியலாளர்களும் நேற்றய தினம் பி.ப 1 மணியளவில் குறித்த
ஹொட்டலை வந்தடைந்து.
பி.ப 1.45 மணியளவில் ஆரம்பிக்கப்பட்ட
கலந்துரையாடல் பி.ப.6 மணியளவில் முடிவுற்றது. பின்னர் அனைவரும் மீண்டும்
7.30 மணியளவில் கலந்துரையாடல் மேற்கொள்வது எனவும் மிகுதி கலந்துரையாடல் 29.03.2014 காலை 8 மணிக்கு ஆரம்பித்து 12 மணியுடன் அனைத்து விடயங்களும்
முடிவுற்று அனைத்து ஊடகவியலாளர்களும் செல்வது என தீர்மானிக்கப்பட்டிருந்தன.
இதனிடையே நேற்று முன் தினம் மாலை 6.30 மணியளவில்
நட்சத்திர கொட்டலான சுது அரலிய ஹொட்டலுக்கு வந்த பொதுபல சேனா அமைப்பினைச்
சேர்ந்த பிக்குமார் குழுவினர் அமெரிக்காவின் நிதியுதவியில் அரச சார்பற்ற
அமைப்பு ஒன்றின் பங்களிப்புடன் கிழக்கைச் சேர்ந்த ஊடகவியலாளர்களுக்கு இந்த
ஹொட்டலில் கலந்துரையாடல் ஒன்று நடைபெறுவதாகவும் இதனை நாங்கள் விடமாட்டோம்,
அமெரிக்கா இலங்கைக்கு எதிரான அமைப்பு அவர்களின் நிதியில் இங்கு எதுவித
செயற்பாடுகளையும் நடாத்த விடமாட்டோம் உடன் பொலநறுவையிலிருந்து கிழக்கைச்
சேர்ந்த ஊடகவியலாளர்கள் வெளியேற வேண்டும் என கோசம் எழுப்பி தர்க்கம்
புரிந்தனர்.
பிக்குமாரின் கோசத்தினை பார்த்து தமிழ்
மற்றும் முஸ்லிம் ஊடகவியலாளர்கள் மௌனமாக இருந்த போதிலும் வந்திருந்த சக
சிங்கள ஊடகவியலாளர்கள், நிலைமையினை பிக்குமாரிடம் எடுத்தியம்ப முற்பட்ட
வேளையில் அவர்கள் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை.
உடன் ஆத்திரமுற்ற சிங்கள் ஊடகவியலாளர்கள் சீறிப்பாய்து பிக்குமாரிடம் தர்க்கம் புரிந்து ஒருவாறு அவர்களை அனுப்பினர்.
இருந்த போதும் 29.03.2014 பி.ப 12 மணியுடன்
நிறைவடைய இருந்த இந்த கருத்தரங்கு நேற்று மாலை 6 மணிக்குப் பிற்பாடு
நடாத்துவதற்கு ஹொட்டல் உரிமையாளரும் மறுத்துவிட்டார். செயற்பாடு இடை
நடுவில் முடிக்கப்பட்டு, பின்னர் நேற்று முன் தினம் இரவு ஹொட்டலில் தங்கியிருந்த
ஊடகவியலார்கள் 29.03.2014 காலை கிழக்கிற்குத் திரும்பி விட்டனர்.
குறித்த நட்சத்திர ஹொட்டல் இலங்கை மத்திய
அரசில் இருக்கின்ற சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேனவின் சகோரருடையது
என்பதும் குறிப்பிடத்தக்கது.-TC

0 comments:
Post a Comment