சிராஸ்;
நீர்மின் உற்பத்தி நிலையங்கள் அமைந்துள்ள பகுதிகளில் உள்ள நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் மிகவும் குறைவடைந் துள்ளதாகவும், இனால் மாலை 06 மணியிலிருந்து இரவு 09 மணி வரை மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு மின்சார சபையின் பொது முகாமையாளர் செனுஜித் தசநாயக்க தெரிவித்துள்ளார்.
மழையற்ற வானிலையால் நீர்த் தேக்கங்கங்களில் நீர்மட்டம் குறைவடைந்துள்ளமையினால் நாளொன்று 15 தொடக்கம் 20 வீதமான நீர்மின் உற்பத்தியே மேற்கொள்ளப்படுகின்றது. ஏனைய 80 வீதமான மின் உற்பத்தியானது அனல் மின் உற்பத்தி நிலையங்களினூடாகவே மேற்கொள்ளப்படுகின்றது.எனவும் மின்சார சபையின் பொது முகாமையாளர் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும் மின் வெட்டு அமுல்படுத்தப்படமாட்டாது எனவும் மின்சார சபையின் பொது முகாமையாளர் செனுஜித் தசநாயக்க மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

0 comments:
Post a Comment