• Latest News

    April 02, 2014

    பாம்புக் கடியால் இறந்த கணவன் 11 வருடங்களின் பின்னர் வருகை; தம்பியுடன! மனைவி குடும்ப வாழ்க்கை!!

    உத்திரப் பிரதேச மாநிலம் பரேலி பகுதியில் 11 வருடங்களுக்கு முன்னர் தேவர்னியா – பாத்வா கிராமத்தைச் சேர்ந்த 25 வயதான சத்ரபால் என்பவர் பாம்பு கடித்து உயிரிழந்தார்.

    அவரது உடலில் அசைவுகள் அற்று, பேச்சு மூச்சற்று கிடந்ததால், அவர் உயிரிழந்துவிட்டார் என்று அவர்களது குடும்ப வழக்கப்படி அவர் உடலை ஆற்றில் தூக்கி வீசிவிட்டனர்.

    மிகமிகச் சிறிய வயதில் விதவையான சத்ரபாலின் மனைவி ஊர்மிளா அப்போது, கர்ப்பமாக வேறு இருந்தார். அவருக்கு வயதும் மிகக் குறைவு என்பதால், சத்ரபாலின் குடும்பத்தால்  மிகவும் யோசித்து,சத்ரபாலின்  இளைய சகோதரரை ஊர்மிளாவுக்கு மணம் முடித்து வைத்தனர். பின்னாளில் அவர்களுக்கு இரு குழந்தைகள் பிறந்தன.
    இந்நிலையில், கடந்த திங்கள்கிழமை, திடீரென அவர்களது வீட்டுக்கு வந்தார் சத்ரபால். அதுவும் 11 வருடங்கள் கழித்து. அப்போது தனக்கு நேர்ந்ததை அவர்களிடம் எடுத்துக் கூறியுள்ளார்.

    பாம்பு கடித்து விஷம் ஏறி இறந்ததாகக் கருதப்பட்ட சத்ரபாலை அவர்களது உறவினர்கள் ஆற்றில் தூக்கி வீசிய பின்னர், அவரை பாம்புக் கடி வைத்தியர்கள் சிலர் தண்ணீரில் இருந்து எடுத்துக் காப்பாற்றியுள்ளனர்.

    அவருக்கு பாம்புக் கடி வைத்தியம் செய்து, படுக்கையில் இருந்து வெகு சிரமங்களுக்கு மத்தியில் எழும்பவிட்டு, உயிரோடு உலவ வைத்துள்ளனர். பின்னர் அங்கிங்கு பல இடங்களுக்கும் சுற்றி, சத்ரபால் அவர் வீட்டுக்கே திரும்பியுள்ளார்.

    இந்நிலையில், சத்ரபால் மற்றும் அவரது இளைய சகோதரர் என இருவரையுமே தனது கணவர்களாக ஊர்மிளா ஏற்றுக் கொண்டுள்ளார். இருவரும் அனுமதிக்கும் பட்சத்தில் இருவருக்குமே மனைவியாக இருப்பேன் என்று கூறியுள்ளார்.

    தற்போது, சத்ரபாலின் சகோதரருடன் இருக்கும் ஊர்மிளா, இந்த விஷயத்தில் குடும்பத்தினர் ஒரு முடிவு எடுத்து அறிவிக்கட்டும் என்று கூறியுள்ளாராம்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: பாம்புக் கடியால் இறந்த கணவன் 11 வருடங்களின் பின்னர் வருகை; தம்பியுடன! மனைவி குடும்ப வாழ்க்கை!! Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top