மட்டக்களப்பு
மாவட்டத்தின் படுவான்கரையையும் எழுவான் கரையையும் இணைக்கும்
கொக்கட்டிச்சோலை கேந்திரத்தில் உருவாக்கப்பட்டுள்ள மண்முனைப் பாலத்தை
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று மாலை வைபவரீதியாகத் திறந்துவைத்தார்.
இப்புதிய பாலத்தை திறந்துவைத்ததன் காரணமாக
கொக்கடிச்சோலை, மகிலடித்தீவு, மாவடிமுன்மாரி, அரசடித்தீவு, முதலைக்குடா,
தாந்தாமலை, முனைக்காடு, தும்பங்கேணி உட்பட சுமார் 2 இலட்சத்திற்கு அதிகமான
மக்கள் மிகுந்த பயனைப்பெறுவர்.
இந்த வைபவத்தில் கிழக்கு மாகாண ஆளுநர்
ரியர் எட்மிரல் மொஹான் விஜய விக்ரம, முதலமைச்சர் நஜீப் ஏ மஜீத், அமைச்சர்
நிர்மல கொத்தலாவல, பிரதியமைச்சர்ளான எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ், பசீர்
சேகுதாவூத், இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் அசகோ உத்தாயோ ஆகியோர் உட்பட
முக்கிய பிரமுகர்களும் பெரந்திரளான பொது மக்களும் கலந்துகொண்டனர்.
MT
MT






0 comments:
Post a Comment