எஸ்.அஷ்ரப்கான்;
இருபதுக்கு இருபது உலகக் கிண்ண கிரிக்கெட் இறுதிப் போட்டியில் இந்திய அணியினரை தோற்கடித்து இலங்கை பெற்ற வெற்றியை எமது பிரதேச இளைஞர்கள் தாய் நாட்டு உணர்வோடு கொண்டாடுவதையிட்டு பெருமையடைவதோடு இதனை ஒரு ஆரோக்கியமான செயற்பாடாக நான் பார்க்கின்றேன் என திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், கல்முனைத் தொகுதி அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்துள்ளார்.
அவர் அவ்வாழ்த்துச் செய்தியில் தொடர்ந்து குறிப்பிடுகையில்,
இருபதுக்கு இருபது உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியினரை தோற்கடித்து உலகக் கிண்ணத்தை சுவீகரித்து தாய் நாட்டிக்கும், மக்களுக்கு பெருமை தேடித்தந்த இலங்கை கிரிக்கெட் அணியினருக்கு எனது 'வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகின்றேன்.
குறிப்பாக திறமையாக பந்து வீசி இந்திய துடுப்பாட்ட வீரர்களை நிலைகுலைய வைத்த ரசித் மலிங்காவுக்கும்இ அதிரடியாக துடுப்பெடுத்தாடிய திலகரட்ன தில்ஷான், குமார சங்கக்கார, திரிமன்ய, மஹல ஜெயவர்த்தன ஆகியோரை பாராட்டுகின்றேன்.
விஷேடமாக இறுதிப் போட்டியில் சிறப்பாக அணியினை வழிநடாத்தி வெற்றிப் பாதைக்கு கொண்டு சென்ற இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவர் ரசித் மலிங்கவையும் பாராட்டுகின்றேன்.
மேலும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும், நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீம் அவர்கள் இறுதிப் போட்டியினை நேரடியாக பார்வையிடுவதற்கு சென்றதுடன் எமது நாட்டு வெற்றி வீரர்களுக்கு நேரடியாக வாழ்த்துக்களை தெரிவித்தமையானது பெருமையும், ஆறுதலாகும்.
எமக்குள் பல கருத்து முரண்பாடுகள் காணப்படுகின்ற போதிலும் நாட்டுக்காக என்கின்ற போது ஒற்றுமைப்படும் செயற்பாடானது எமது தாய் நாட்டின் இன ஒற்றுமையை எதிர்காலத்தில் வலுவடையச் செய்யும் என்பதில் ஐயமில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment