• Latest News

    April 07, 2014

    அக்கரைப்பற்று வலய அஹதிய்யாப் பாடசாலை அதிபர்களுடனான கலந்துரையாடல்

    Displaying 01.JPGஎம்.வை.அமீர்;
    அக்கரைப்பற்று வலய அஹதிய்யாப் பாடசாலை அதிபர்களுக்ளுடனான கலந்துரையாடல் 2014. 04. 06 காலை 9:00 மணிக்கு அக்கரைப்பற்று அஸ்-ஸாஹிரா வித்தியாலயத்தில் அக்கரைப்பற்று வலயபாடசாலைத் தலைவர் மௌலவி. எம் .எம்.முபீஸ் (மன்பாஹி) அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

    இந்நிகழ்வில் அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை, பாலமுனை,பொத்துவில்,ஒலுவில் ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த அஹதிய்யாப் பாடசாலை அதிபர்கள் கலந்துகொண்டனர்.  

    விசேட அதிதியாக அம்பாரைமாவட்ட அஹதிய்யா பாடசாலை சம்மேளனத்தின் தலைவர்  மெலளவி யூ.எல் றிபாயுதீன் (ஹாஷிபி) மற்றும்  சிறப்பு அதிதியாக அம்பாரைமாவட்ட அஹதிய்யா பாடசாலை சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் ஐனாப் எஸ். ஏல்.மன்சூர் Bsc JP கலந்து கொண்டார்.

    அரசாங்கத்தினால் நடாத்தப்படும் அஹதிய்யப்பரீட்சைகளுக்கான பரீட்சை எழுதும் மாணவர்களை அதிகரித்தல் 

    இயங்காமல் இருக்கும் அஹதிய்யாப் பாடசாலைகளை நடாத்துவதற்கு சகல ஏற்பாடுகளையும் செய்தல் போன்ற தீர்மானங்கள் இக்கலந்துரையாடலில் மேட்கொள்ளப்பட்டது. இதன்போது அக்கரைப்பற்று வலய அஹதிய்யாப் பாடசாலைகளின் குறைகளையும்  கோட்டறிந்தனர்
    நன்றியுரையினை பொதுச் செயலாளர் எஸ்.றிபாயிதீன்  நிகழ்தினார்.
     
    Displaying 3.JPG 
     
    Displaying 4.JPG
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: அக்கரைப்பற்று வலய அஹதிய்யாப் பாடசாலை அதிபர்களுடனான கலந்துரையாடல் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top