• Latest News

    April 03, 2014

    நாட்டில் பெண்களுக்கெதிரான வன்முறை அதிகரித்து வருகின்றது: உளவள ஆலோசகர் றினோஸ் ஹனீபா

    எஸ்.அஷ்ரப்கான்;
    நாட்டில் பெண்களுக்கெதிரான வன்முறை அதிகரித்து வருகின்றது. இதனால் பெண்கள் சுதந்திரமாக தமது வாழ்க்கையைக் கொண்டு செல்லமுடியாத துர்ப்பாக்கிய நிலைக்குத்தள்ளப்பட்டுள்ளனர் என்று  செக்றோ ஸ்ரீலங்கா நிறுவனத்தின் தலைவரும் உளவள ஆலோசகர் றினோஸ் ஹனீபா தெரிவித்தார்.

    கல்முனை ஹூதா பௌண்டேசன் அனுசரணையில் கல்முனை றெளழதுந்நிஸா பெண்கள் அமைப்பின் ஏற்பாட்டில்  பெண்களுக்கு நடைபெற்ற கடந்த இரு மாதகால பயிற்சிநெறியின் இறுதிநாள் நிகழ்வில் வளவாளராக  கலந்து கொண்ட றினோஸ் ஹனீபா தனதுரையில் மேலும் குறிப்பிடும்போது
    பெண்கள் வீட்டின் கண்கள் மாத்திரமல்ல பெண்கள் சுதந்திரமாக வாழ முடியாவிட்டால் நாட்டிலும் அமைதியினை எதிர்பார்க்க முடியாது.  தற்கால  சூழ்நிலையினை பொருத்தவரை பெண்களை பாதுகாப்பதற்கான சட்டதிட்டங்கள் அதிகரித்துள்ளன ஆயினும் அது எந்தளவு து{ரம் பெண்களுக்கு சாதகமாகயிருக்கின்றது என்பது இன்றும் கேள்விக் குறியாகவே இருக்கின்றது. ஒரு பிள்ளை பிறந்ததிலிருந்து வளர்ந்து தனக்குரிய முடிவுகளை சுதந்திரமாக எடுக்கும் வரை பெற்றோர்கள் மிக மிக கரிசினையாக இருக்க வேண்டும்.  துஷ்பிரயோகத்திற்கு உட்பட்ட பெண் பிள்ளைகளை ஆய்வு செய்து பார்க்கும் போது அப்பெண்பிள்ளைக்கும் பெற்றோருக்குமிடையிலான தொடர்வுயின்மையே அவர்கள் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாவதற்கான அடிப்படைகாரணமாகயிருகின்றது.

    பெற்றோர் தன்பிள்ளைகளிடம் அன்பாகவும் அவர்களின் தேவைகளை புரிந்து நடந்தால் அப்பிள்ளை எந்த பிரச்சினை ஏற்படினும் அதை முதலில்  தனது பெற்றோரிடமே தெரிவிப்பர் இப்பழக்கமானது சில வீடுகளில் மாத்திரமே காணப்படுவது துரதிஷ்ட விடயமாகவுள்ளது. இவ்நவீன காலத்தில் பிள்ளைகளின் தொடர்வுகள் இன்டநெட்டுடன் அதிகரித்துள்ளது வீட்டிலுள்ளவர்களுடன் தொடர்பினை ஏற்படத்துவதை விட முகப் புத்தகங்களில் தொடர்பினை ஏற்படுத்தி தமது பெருமதியான வாழ்க்கையினை அழித்து விடுகின்றார்கள். பிள்ளைகள் எதனை செய்கின்றார்கள் எங்கு செல்கின்றார்கள் அவர்களின் விடயங்களுக்கு யார் பொருப்பாகயிருக்கின்றார்கள் என்ற விடயம் அருகிப்போவதால் துஷ்பிரயோகத்தை தடுப்பது சாத்தியமற்ற விடயமாகமாறிக் கொண்டிருக்கின்றது என தெரிவித்தார்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: நாட்டில் பெண்களுக்கெதிரான வன்முறை அதிகரித்து வருகின்றது: உளவள ஆலோசகர் றினோஸ் ஹனீபா Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top