• Latest News

    April 05, 2014

    கல்வியில் உயர்ந்து செல்வது போன்று பண்பிலும் உயரவேண்டும்: மொனராகலை மஹாமேவ்ன அசபௌவ தேரோ

    எம்.வை.அமீர்;
    கல்வியில் உயர்ந்து செல்வது போல் புத்த மஹான் எங்களுக்கு உபதேசித்துள்ளது போன்று பண்பிலும் உயரவேண்டும் என்று மொனராகலை மஹாமேவ்ன அசபௌவ தேரோ தனது மார்க்க உரையின் போது தெரிவித்தார்.
    இன்று இலங்ககை தென்கிழக்கு பல்கலைக்கழக பிரயோக விஞ்ஞான பீடத்தில் இடம்பெற்ற ‘சம்புத்த ராஜ நமமி நிகழ்வின் போது அங்கு மாணவர்கள் மத்தியில் உரையாற்றும் போதே மேற்படி கருத்துக்களை
    வெளியிட்டார். தென்கிழக்கு பல்கலைக்கழக பிரயோக விஞ்ஞான பீட முதலாம் இரண்டாம் வருட மாணவர்களால் ஏற்பாடு செய்யப்படிருந்த இந்நிகழ்வுக்கு தென்கிழக்கு பல்கலைக்கழக சிரேஷ்ட மாணவர் ஆலோசகர் கலாநிதி கே.கோமதி விசேட அதிதியாக கலந்து கொண்டிருந்தார்.
      
    பெரும்திரளான சிங்கள மாணவர்கள் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது. சம்மாந்துறையில் நடைபெறும் நிகழ்வில் பன்குகொள்வதர்க்காக மாணவர்கள் ஒலுவில் வளாகங்களில் இருந்து வருகை தருவதற்காக பல்கலைக்கழகத்தால் விசேட வாகன வசதிகளும் செய்யப்பட்டிருந்தன.
    Displaying 03.JPG 
    Displaying 06.JPG 
    Displaying 04.JPG 
     
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: கல்வியில் உயர்ந்து செல்வது போன்று பண்பிலும் உயரவேண்டும்: மொனராகலை மஹாமேவ்ன அசபௌவ தேரோ Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top