சுலைமான் றாபி;
நிந்தவூரில்
காணப்படும் கடின பந்து துறையில் பிரகாசிக்கும் அணிகளின் மேலதிக பயிற்சிகளை
கருத்திற்கொண்டு அவைகளை வளப்படுத்தும் முகமாகவும், அத்தியாவசிய தேவைகளில்
ஒன்றாகக் காணப்படும் உள்ளக விளையாட்டு அரங்கினை நிர்மாணிப்பது
சம்பந்தமாகவும் அறிவுறுத்தும் விஷேட சந்திப்பு நேற்று (05.04.2014) இரவு
9.30 மணியளவில் பாராளுமன்ற உறுப்பினர் பைசல் காசிம் தலைமையில் அவரது
அலுவலகத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பிரதேச சபையின் உதவித்தவிசாளரும்
பாராளுமன்ற உறுப்பினரின் செயலாளருமான எம்.எம்.எம். அன்சார், அம்பாறை
மாவட்ட கபடி பயிற்றுவிப்பாளரும், முன்னாள் நிந்தவூர் விளையாட்டு
உத்தியோகத்தருமான ஏ.எல்.அனஸ் அஹமட், நிந்தவூர் விளையாட்டு அபிவிருத்தி
மற்றும் சமூக சேவைகள் அமைப்பின் தலைவர் ஐ.எல். இப்றாஹிம் மற்றும்
விளையாட்டுக் கழகங்களின் தலைவர்கள், செயலாளர்கள் அனைவரும் இந்நிகழ்வில்
கலந்து கொண்டனர்.
இங்கு உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் பைசல் காசிம் :
எதிர்வரும்
ஒரு மாத காலப்பகுதிக்குள் நிந்தவூரில் காணப்படும் உள்ளக விளையாட்டுக்களை
அபிவிருத்தி செய்வதற்காக உள்ளக விளையாட்டு அரங்கு அமைக்கப்படும் அதேவேளை,
வெளியூர்களிலும் உள்ளக விளையாட்டு அரங்கினை நிர்மாணித்துக் கொடுக்க
நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் நீண்ட நாள்
குறையாகக் காணப்படும் நிந்தவூர் கலாச்சார மண்டபமும் பாராளுமன்ற உறுப்பினர்
எம்.ரி. ஹசன் அலியின் முழுப்பங்களிப்புடன் நிர்மாணித்து முடிக்கப்படும்
என்றும் தெரிவித்தார்.
இதேவேளை கடினபந்து துறையின் பயிற்சிகளை
மேம்படுத்துவதற்காக தெரிவு செய்யப்படும் பாடசாலைகளில் கடின பந்து பயிற்சி
கூடங்களினை அமைப்பதற்கும், கலாச்சார மண்டபதிற்கு அருகாமையில் காணப்படும்
காணியில் பிரதேச சபையின் அனுமதியின் கீழ் உள்ளக விளையாட்டு அரங்கினை
நிர்மாணிக்க உத்தேசித்துள்ளதாகவும் தெரிவித்தார்.
இதேவேளை மைதான அபிவிருத்தி சம்பந்தமாக ஒரு குழுவினை
அமைத்து செயட்படுவதற்கு பாராளுமன்ற உறுப்பினரால் ஆலோசனை
முன்வைக்கப்பட்டபோது இந்தக் குழுவினை நிறுவுவதற்கு கழக பிரதிநிதிகள்
ஆதரவழித்து குழுவினை தெரிவு செய்தனர். இதில் தலைவராக ஐ.எல். இப்றாஹிம்
அவர்களும், செயலாராக றிலா இப்றாஹிம் அவர்களும் கழக பிரதிநிதிகளால் தெரிவு
செய்யப்பட்டுள்ளனர். மேலும் இதன் அங்கத்தவர்களாக ஒவ்வொரு கழகங்களின்
தலைவர்கள் மாத்திரம் இதில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர்.
இதேவேளை கடந்த மார்ச் மாதம் (18.03.2014)ம் திகதி
பாராளுமன்ற உறுப்பினரால் மைதான அபிவிருத்தி சம்பந்தமான விஷேட சந்திப்பு
அவரது அலுவலகத்தில் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கதாகும்.
0 comments:
Post a Comment