• Latest News

    April 08, 2014

    அம்பாறை மாவட்ட உதைபந்தாட சங்கம், மேஸ்ரோ அமைப்புடன் ஒப்பந்தம்

    எம்.வை.அமீர்;
    கிழக்கு மாகாணத்தின் அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் உள்ள உதைபந்தாட்ட சங்கங்களின் சிரேஷ்ட கழகங்களுக்கிடையே (A பிரிவு கழகங்கள்) இம்மாதத்தின் கடைசி வாரத்தில் நடத்தப்படவுள்ள விலகல் (knockout) அடிப்படையிலான  உதைபந்தாட்ட சுற்றுப்போட்டிக்கு அனுசரணையாளர்களாக மேஸ்ரோ அமைப்பு செயற்படுவது சம்மந்தமான ஒப்பந்தம் கைச்சாத்திடும் நிகழ்வு,
    07-04-2014ல் உதைபந்தாட்டச்சங்கத்தின் மருதமுனை மசூர் மௌலானா விளையாட்டு கட்டிடத்தொகுதியில் இடம்பெற்றது. மேஸ்ரோ அமைப்பின் சார்பில் அதன் பதில் தலைவர் சட்டத்தரணி ஏ.எம்.நசீல் அவர்களும் அம்பாறை மாவட்ட உதைபந்தாட சங்கத்தின் சார்பில் அச்சங்கத்தின் பொதுச்செயலாளர் எம்.ஐ.எம்.அப்துல் மனாப் அவர்களும் கைச்சாத்திட்டு ஆவணங்கள் பரிமாறிக்கொண்டனர்.
    அம்பாறை மாவட்ட உதைபந்தாட சங்கத்தின் தலைவர் சட்டத்தரணி ஏ.எம்.ரக்கீப் தலைமையில் இடம்பெற்ற  ஒப்பந்த கைச்சாத்து நிகழ்வின் போது மேஸ்ரோ அமைப்பின் இஸ்தாபாகரும்  கல்முனை அபிவிருத்தி குழுவின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் அவர்களும் பிரசன்னமாகியிருந்த அதேவேளை  அம்பாறை மாவட்ட உதைபந்தாட சங்கத்தின் நிறைவேற்று குழு உறுப்பினர்களும் அங்கத்தினரும் சமுகமளித்திருந்தது  குறிப்பிடத்தக்கது.

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: அம்பாறை மாவட்ட உதைபந்தாட சங்கம், மேஸ்ரோ அமைப்புடன் ஒப்பந்தம் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top