ஜே.வி.பி.யிலிருந்து பிரிந்து சென்றவர்கள்
யதார்த்தத்தைப் புரிந்து கொண்டு மீண்டும் எம்முடன் இணைந்துகொள்ளலாம். ஆனால்
ஜே.வி.பி.க்கு துரோகம் செய்து விட்டு சென்றவர்களை ஒரு போதும் நாம் இணைத்துக்கொள்ளமாட்டோம் என ஜே.வி.பி. யின்
பிரசார செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்தார். 1971 ஆம் ஆண்டு ஏப்ரலில்
கொல்லப்பட்ட அக்கட்சியின் வீரர்களை நினைவு கூரும் நிகழ்வில் கலந்து கொண்டு
உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார் .
இதில் தொடர்ந்து கருத்து தெரிவித்துள்ள
ரில்வின் சில்வா அரசாங்கத்தின் வேர் தற்போது ஆட்டம் கண்டுள்ளது. அதற்கு
முக்கிய காரணம் ஜே.வி.பி.யே தவிர ஐ.தே. கட்சியல்ல. ஆட்டம் கண்டுள்ள
அரசாங்கத்தின் வேரை நாமே பிடுங்கி எடுப்போம்.
ஐ.தே. கட்சி கூறி வருவது போல் நாம்
யாருடனும் கூட்டு சேரப்போவதில்லை. ஐ.தே. கட்சியுடன் எமக்கு எந்த உறவும்
இல்லை. ஜே.வி.பி. 1971 ஆம் ஆண்டு ஏப்ரலில் எமது கட்சிக்காக உயிர்நீத்த
வீரர்கள் எதிர்பார்த்த பிரார்த்தனையை நோக்கி நகர்ந்து கொண்டுள்ளோம்.
அவர்கள் அன்று கண்ட கனவு நனவாகும் காலம் மிக தொலைவில் இல்லை.
தென் மேல் மாகாண தேர்தலில் அரசாங்கம்
பாரிய பின்னடைவை எதிர்நோக்கியுள்ளது. தென் மாகாணத்தில் சுமார் ஒரு
லட்சம் வாக்குகளாலும் மேல் மாகாணத்தில் ஒரு இலட்சத்து ஐம்பதாயிரம்
வாக்குகளாலும் பின்னடைவை எதிர்நோக்கியுள்ளது. தென் மாகாணம்
ஜனாதிபதியின் கோட்டை. அம்பாந்தோட்டை அதில் முக்கியமாகும்.
அங்கேயும் பாரிய பின்னடைவை சந்தித்துள்ளது. மேல் மாகாணம்
அரசாங்கத்தின் இதயம் அங்கேயும் அரசாங்கம் ஆட்டம் கண்டுள்ளது.
அரசாங்கத்துக்கு தூர நோக்கு இல்லை.
எங்கே செல்கின்றார்கள் என்பது அவர்களுக்கே தெரியாது. குறிக்கோள்
இல்லை. மக்களை பாதாள பகுதியில் அரசாங்கம் தள்ளியுள்ளது.
அரசாங்கத்தின் சரிவுக்காலம் தொடங்கியுள்ளது. மேல் தென்
மாகாணங்களில் கடைசி துரும்பாக ஜெனீவா பிரச்சினையை முன்வைத்தார்கள்.
ஆனால் அதுவும் மக்கள் மத்தியில் எடுபடவில்லை.
1971 ஆம் ஆண்டு பின்னடைந்த நாம் 1976 இல்
மீண்டும் எழுந்தோம். அதேவேளை மீண்டும் 1988, – 89 களில் மீண்டும் சரிவு
நிலைக்குச் சென்றோம்.பின் 1994 இல் மீண்டும் முன்னோக்கிப் புறப்பட்டோம்.
அது 2008 இல் மீண்டும் சறு
க்கி விட்டது. இந்நிலையில் 2014 இல் மேல், தென் மாகாண சபை தேர்தலில் எழுந்துள்ளோம் என தெரிவித்துள்ளார் .

0 comments:
Post a Comment