ஊழல் குற்றச்சாட்டுக்களுக்காக இஸ்ரேலின் முன்னாள்
பிரதமர் எகுட் ஒல்மெர்ட் அவர்களுக்கு இஸ்ரேலிய நீதிமன்றம் ஒன்று 6 வருட
சிறைத்தண்டனை விதித்துள்ளது.
ஊழலுக்காக தண்டிக்கப்படுகின்ற இஸ்ரேலின் முதலாவது முன்னாள் தலைவர் இவராவார்.
ஜெரூசலத்தில்
நகர மேயராக இருந்தபோது, ஹொலிலாண்ட் வீடமைப்பு திட்டத்துக்காக லஞ்சம்
பெற்றதாக இந்த ஆண்டின் முற்பகுதியில் அவர் குற்றங்காணப்பட்டிருந்தார்.
ஏரியல் சரோனுக்கு அடுத்ததாக 2006 இல் பிரதமரான ஒல்மெர்ட் அவர்கள் 2008 இல் இராஜினாமா செய்தார்.
அவர் மேன்முறையீடு செய்வார் என்று அவரது சட்டத்தரணி கூறியுள்ளார்.
BBC -

0 comments:
Post a Comment