• Latest News

    May 29, 2014

    பிள்ளையை வளர்க்க போதிய வருமானமில்லை; சிறுவர் பராமரிப்பு நிலையத்தில் சேர்க்கவும்: பெற்றோர் நீதிமன்றத்தில் முறைப்பாடு!

    பிள்ளையை வளர்க்க முடியாது என பெற்றோர் நீதிமன்றில் முன்வைத்த கோரிக்கையை நீதவான் நிராகரித்துள்ளார். இரண்டரை வயதான ஆண் குழந்தை ஒன்றை வளர்க்க முடியாது எனத் தெரிவித்து குழந்தையின் பெற்றோர் சட்டத்தரணி ஊடாக நீதிமன்றில் மனுவொன்றை தாக்கல் செய்திருந்தனர்.

    களுத்துறை பிரதேத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. களுத்துறை பிரதேசத்தைச் சேர்ந்த பெற்றோர் தமது பிள்ளையை வளர்க்க முடியாத சூழ்நிலை காணப்படுவதாகவும், பிள்ளையை சிறுவர் பாராமரிப்பு நிலையமொன்றில் சேர்க்குமாறும் நீதவானிடம் கோரியுள்ளனர்.

    எனினும், இந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் பிள்ளையை பெற்றோர் பராமரிக்க வேண்டியது கடமையாகும் எனவும் களுத்துறை நீதவான் அஜித் எம். மாசிங்க நேற்று நீதிமன்றில் தெரிவித்துள்ளார். சட்டத்தரணி ஓசதி பெரேராவின் ஊடாக பெற்றோர் நீதிமன்றில் கோரிக்கை விடுத்திருந்தனர்.

    கடந்த 2012ம் ஆண்டில் பிள்ளையை வளர்க்க முடியாது எனத் தெரிவித்து பெற்றோர் களுத்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தனர். அந்த சந்தர்ப்பத்திலும் குறித்த பிள்ளையை பெற்றோரே வளர்க்க வேண்டுமெனத் தெரிவித்து பொலிஸார், பிள்ளையை பெற்றோரிடமே ஒப்படைத்திருந்தனர்.

    குழந்தையை பராமரிப்பதற்கு போதியளவு வசதி கிடையாது எனவும் இதனால் சிறுவர் பாராமரிப்பு இல்லமொன்றில் ஒப்படைக்குமாறும் கோரி மீண்டும் களுத்துறை நீதிமன்றில் சட்டத்தரணி ஊடாக பெற்றோர் கோரியிருந்தனர்.
    எனினும், இந்தக் கோரிக்கையை நீதவான் நிராகரித்ததுடன், பெற்றோருக்கு அறிவுரைகளையும் வழங்கியுள்ளார்.

    பிள்ளையை பராமரிக்கத் தவறினால் கடுமையான தண்டனை விதிக்கப்படும் என நீதவான் எச்சரிக்கை விடுத்துள்ளார். களுத்துறை மஹாஹினடியன்கல என்னும் இடத்தைச் சேர்ந்த அமில விஸ்வஜித் சுசஹேவா மற்றும் இரேசா மதுவந்தி ஆகியோரே இவ்வாறு எச்சரிக்கப்பட்ட பெற்றோராகும் எனத் தெரிவிக்கப்படுகிறது.-TWTC
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: பிள்ளையை வளர்க்க போதிய வருமானமில்லை; சிறுவர் பராமரிப்பு நிலையத்தில் சேர்க்கவும்: பெற்றோர் நீதிமன்றத்தில் முறைப்பாடு! Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top