
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் பாராளுமன்ற குழுவினர், சிரேஷ்ட உச்சபீட உறுப்பினர்கள் ஆகியோர் தற்போதைய நிலைமை பற்றி இன்று புதன் கிழமை காலையில் ஆராய்ந்தனர்.
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ், அளுத்கமை, பேருவளை, தர்கா டவுண், வெலிப்பிட்டிய மற்றும் வெலிப்பென்ன போன்ற இடங்களில் முஸ்லிம்களை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட எல்லாவிதமான வன்செயல்களையும் வன்மையாக கண்டிக்கிறது என்றும், இவை தனிப்பட்ட சம்பவங்கள் மட்டுமல்ல என்றும் இந் நாட்டு முஸ்லிம் சமூகத்தின் மீது அண்மைய வருடங்களில் ஏற்பட்டு வரும் சகிப்புத் தன்மையற்ற நிலைமையின் வெளிப்பாட்டின் விளைவே என்றும் தீர்மானிக்கப்பட்டது.
1. சமய நம்பிக்கை சுதந்திரம் சார்ந்த விசேட பிரதிநிதி
2. சிறுபான்மை சமூகங்களின் உரிமைகள் சார்ந்த விசேட பிரதிநிதி
டாக்டர். ஏ.ஆர்.ஏ ஹபீஸ்
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர்
அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்களின்
ஊடக ஆலோசகர்
0 comments:
Post a Comment