• Latest News

    June 19, 2014

    பொதுபலசேனா முஸ்லிம்களையும் தனி நாடு கோரத் தூண்டுகிறதா?பாராளுமன்றத்தில் அமைச்சர் அதாஉல்லா ஆவேசம்

    சிங்கள முஸ்லிம் மக்களுக்கிடையிலான ஒற்றுமையைக் குழப்பி அதன் மூலம் பிளவுகளை ஏற்படுத்தி அரசாங்கத்தை வீழ்த்த சில நாசகார குழுக்கள் முயற்சிப்பதாகவும் சகல தரப்பினரும் இணைந்து நாட்டைப்பாதுகாக்க வேண்டுமெனவும் தேசிய காங்கிரசின் தலைவரும் உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சருமான ஏ.எல்.எம்.அதாஉல்லா இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

    தொடர்ந்தும் உரையாற்றிய அமைச்சர் தமிழ்ப் பயங்கரவாதம் தமிழ் மக்களை அழித்து கோவில்களையும் நாசப்படுத்தியதுடன் முஸ்லிம்களையும் கொன்று குவித்து பள்ளிவாயல்களையும் அழித்ததுடன் பௌத்த விகாரைகளைத்தாக்கி பிக்குகளையும் சிங்கள மக்களையும் மனிதநேயமின்றி துவம்சம் செய்தனர். அதனால் இவர்கள் நம் கண்முன்னே அழிந்த வரலாற்றை  நாம் நேரில் கண்டோம்.

    ஜனாதிபதி யுத்தத்தை முடிவுறுத்தி நாட்டில் அமைதியை நிலைநாட்டினார்.இதனால் சகல இன மக்களும் ஒற்றுமையாக வாழும் சூழல் ஏற்படுத்தப்பட்டது. துரதிஸ்ட வசமாக இன்று பொதுபலசேனா நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்த முயல்கிறது. இதன் தூண்டுதலால் அளுத்கம பேருவல பிரதேசங்களில் முஸ்லிம்களது வீடுகள் கடைகள் உடைமைகள் எரித்தும் உடைக்கப்பட்டும் அந்த மக்களின் பொருளாதாரம் நாசப்படுத்தப்பட்டுமுள்ளது. நமது சகோதரர்கள் சிலரது உயிர்கள் காவுகொள்ளப்பட்டுள்ளன. பலர் காயமடைந்துள்ளனர்.

    குறிப்பாக வடக்குக் கிழக்கிற்கு வெளியில் வாழும் முஸ்லிம்களை அழிப்பதற்கு பொதுபலசேனா முயற்சிசெய்கின்றது. இதன்மூலம் தமிழர்கள் தனி ராஜ்ஜியம் கேட்டதைப்போன்று முஸ்லிம்களின் உணர்வுகளைத் தூண்டி முஸ்லிம்களும் தனிநாடு கோர இவர்கள் தூண்டுதல் வழங்குகின்றனரா? ஏன ஆவேசமாக சபையில் கேள்வி எழுப்பி இப்பிரச்சினையை தீர்ப்பதற்கு சகலரும் முன்வரவேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: பொதுபலசேனா முஸ்லிம்களையும் தனி நாடு கோரத் தூண்டுகிறதா?பாராளுமன்றத்தில் அமைச்சர் அதாஉல்லா ஆவேசம் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top