சஹாப்தீன்;
கிழக்கு மாகாண முஸ்லிம்களுக்கு தலைமை தாங்குகின்ற தகுதி அமைச்சர் அதாவுல்லாவுக்கு மாத்திரமே இருக்கின்றது. இந்த பொறுப்பை அவர் தட்டிக் கழிக்க கூடாது. அவர் இதனை ஏற்கும் போது, நாங்களும் ஒத்துழைப்புக்களை வழங்கல் வேண்டும்.
கிழக்கு மாகாண முஸ்லிம்களுக்கு தலைமை தாங்குகின்ற தகுதி அமைச்சர் அதாவுல்லாவுக்கு மாத்திரமே இருக்கின்றது. இந்த பொறுப்பை அவர் தட்டிக் கழிக்க கூடாது. அவர் இதனை ஏற்கும் போது, நாங்களும் ஒத்துழைப்புக்களை வழங்கல் வேண்டும்.
இவ்வாறு கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் எம்.ரி.ஏ.நிஸாம் நிந்தவூர் அல்-மஸ்ஹர் பெண்கள் உயர்தரப் பாடசாலையில் (31.05.2014) நடைபெற்ற நிந்தவூர் ஹிதாயத்துல்லா மீர்சா எழுதிய "நேசவினை " நாவல் வெளியீட்டு வைபவத்தில் உரையாற்றும் போது தெரிவித்தார்.
இவ்வைபவத்தில் அமைச்சர் ஏ.எல்.எம்.அதாவுல்லா பிரதம அதிதியாக கலந்து கொண்டிருந்தார்.கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் நிஸாம் தொடர்ந்து பேசுகையில்,
கிழக்கு மாகாண முஸ்லிம்களுக்கு தலைமை தாங்கும் தகுதி அமைச்சர் அதாவுல்லாவுக்கு மாத்திரமே இருக்கின்றது. இதனை ஒரு கல்விப் பணிப்பாளராக கூறவில்லை. ஒரு சாதாரண மனிதனாகவே தெரிவிக்கின்றேன். என்ற போதிலும், இந்தப் பொறுப்பை அவர் தட்டிக் கழித்துக் கொண்டு வருகின்றார்.
இன்று கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்களின் இருப்பு, பாதுகாப்பு போன்றன கேள்விக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றன. முஸ்லிம்களுக்கு இவ்வாறு அச்சுறுத்தல்கள் ஏற்படும் போது, மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டங்களில் அமைச்சர் அதாவுல்லா ஆக்ரோசமாக அவற்றை சுட்டிக் காட்டி தீர்வனை பெற்றுக் கொள்வதனை நாம் நேரடியாக் கண்டுள்ளோம்.
முஸ்லிம்களுக்கு ஒரு கட்சி இருந்த நிலைமாறி, இன்று பல கட்சிகள் எம்மடையே உள்ளன. நமது ஒற்றுமை இவ்வாறு சிதைக்கப்பட்டதனால்தான் நாம் பலவீனப்பட்டுள்ளோம்.
கிழக்கு மாகாணத்தில் பல இன்னல்களை நாம் அனுபவித்துக் கொண்டிருக்கின்றோம். அங்கு ஒரு நிர்வாகம் இருக்கின்றதேயன்றி, அதனை முழுமையாக நன்மையடைந்து விட முடியாதுள்ளது.
ஆதலால், இவற்றை எல்லாம் கருத்திற் கொண்டு, எம்மிடையே உள்ள கட்சிகள் யாவும் ஒற்றுமைப்படல் வேணடும். ஆதன் பின்னர் பொருத்தமானவரை தலைவராகக் தேர்வு செய்து வேண்டும். கிழக்கு மாகாண முஸ்லிம்களுக்கு யார் தலைமை தாங்குவதற்கு தகுதியானவர் என்று பார்த்து அவரை அதற்கு நியமிக்க வேண்டும்.
இன்று வெளியிடப்பட்ட நேசவினை எனும் நாவல் சிறப்பாக எழுதப்பட்டுள்ளது. சாகித்திய பரிசு பெறும் தகுதியையும் அது கொண்டுள்ளது. இது போன்ற நாவல்களை எழுத்தாளர் ஹிதாயத்துல்லா மீர்சா எழுத வேண்டும்.
0 comments:
Post a Comment