• Latest News

    June 01, 2014

    கல்முனை தமிழ் மக்களின் பிரச்சினைகள் மாநகர சபையால் இழுத்தடிக்கப்பட்டுள்ளன: முஸ்லிம் மக்கள் கட்சி

    எஸ்.அஷ்ரப்கான்;
    தமிழ் தேசிய கூட்டமைப்பினர் கல்முனை மாநகர சபை முதல்வரை கண்டு பேசியதன் பலனாக கல்முனை  தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்க்க முயல்வதாக கல்முனை மேயர் சொல்லியிருப்பதன் மூலம் இது வரையான காலப்பகுதியில் கல்முனை தமிழ் மக்களின் பிரச்சினைகள் மாநகர சபையால் இழுத்தடிக்கப்பட்டுள்ளன என்பது நிரூபணமாகியுள்ளது என முஸ்லிம் மக்கள் கட்சி தெரிவித்துள்ளது. இது பற்றி அக்கட்சி தெரிவித்துள்ளதாவது,

    கல்முனை மாநகர சபையின் ஆட்சி நீண்ட காலமாக ஒரே கட்சியின் கீழ் உள்ளதால் அங்கு ஊழல்கள் அதிகமாகியுள்தையும், தமிழ் மக்களின் பிரச்சினைகள் மட்டுமல்ல முஸ்லிம் மக்களின் பல பிரச்சினைகள் தீர்க்கப்படாமல் இழுத்தடிக்கப்படுகின்றன எனபதையும் எமது கட்சி தொடர்ந்து சுட்டிக்காட்டி வருகிறது. இத்தகைய நிலையை போக்க வேண்டுமாயின் கல்முனையில் முஸ்லிம் கட்சிகளும் தமிழ் கட்சிகளும் இணைந்த கூட்டாட்சியை உருவாக்குவதன் மூலமே கல்முனை மக்கள் மத்தியில் சமத்துவத்தை உண்டாக்க முடியும் என அறைகூவல் விடுத்து வருகிறோம். ஆனால் இதனை ஏற்றுக்கொள்ளாமல் தமிழ் மக்களையும் முஸ்லிம்களையுடம் பிரித்து வைப்பதிலேயே முஸ்லிம் காங்கிரசும் தமிழ் கூட்டமைப்பும் செயற்படுகின்றன.
     
    இந்த நிலையில் கல்முனை தமிழ் மக்கள் த. கூட்டமைப்பை மீறி தன்னிச்சையாக செயற்பட முனைந்ததன் காரணமாக கூட்டமைப்பும், முஸ்லிம் காங்கிரசும் கல்முனை மாநகர சபையில் கூடி கல்முனை தமிழ் மக்கள் பிரச்சினைக்கு தீர்வு காணப்போவதாக கூறியுள்ளனர். இத்தகைய பிரச்சினைகளில் சிலதை உடனடியாக தீர்க்கப்போவதாக மேயர் நிசாம் காரியப்பரும் ஏற்றுக்கொண்டுள்ளதன் மூலம் இதே கட்சியின் மேயர்களாக இருந்த சிராஸ், ஹரீஸ், மசூர் மௌலானா பேகான்றவர்கள் இப்பிரச்சினைகளை தீர்க்கவில்லை என்பது தெரிகிறது. அத்துடன் த. கூட்;டமைப'பும் மு. காவும் மாநகர சபைக்குள் கூட்டம் நடத்திய பின்புதான் தமிழ் மக்களின் பிரச்சினைகளை இன்றைய மேயர் தெரிந்து கொள்ளும் கேவலமான  நிலையில் மேயர் இருப்பதன் மூலம் கல்முனை மாநகராட்சி என்ன நிலையில் உள்ளது என்பதை புரிந்து கொள்ளலலாம்.

    கல்முனை மாநகர சபையில் மு. காவும், தமிழ் கூட்ட்மைப்பும் சந்தித்தமைக்கான பிரதான காரணமாக தேர்தல் ஒன்று நெருங்குவதும், கிழக்கு முதலமைச்சர் பதவிச்சண்டை மீண்டும் உருவாகியுள்ளதாலும் த. கூட்டமைப்புடன் நெருங்குவது போன்று அரசுக்கக்காட்டி தமது சுயநலன்களை அடைந்து கொள்வதற்கான முஸ்லிம் காங்கிரசின் ஏமாற்று நடவடிக்கையாகவே நாம் பார்க்கிறோம். இதனை நன்கு புரிந்திருந்தும் கிழக்கு மாகாண சபையில் மு. கா தமக்கு ஆதரவளிக்கும் என்ற நப்பாசையில் இத்தகைய ஏமாற்று வேலைக்கு தமிழ் கூட்டமைப்பும் துணை போவதன் மூலம் அக்கட்சியும் தெரிந்து கொண்டே தமிழ் மக்களை ஏமாற்ற முனைகிறதா என்ற கேள்வி எழுகிறது.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: கல்முனை தமிழ் மக்களின் பிரச்சினைகள் மாநகர சபையால் இழுத்தடிக்கப்பட்டுள்ளன: முஸ்லிம் மக்கள் கட்சி Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top