ஆதம்பாவா வக்கீர் ஹுசைன்-
இணையத்தளங்களில்
இன்று காலை ஒரு மாபெரும் மறுப்பு செய்தி ஒன்று காணக்கிடைத்தது. கல்முனை பிரதேச சபை
செயலாளராக ஒரு பெரும்பான்மை இனத்தவரை நியமித்தது தவறு என்றும், மேலும் இன்றைய
நாட்களில் பல எதிர் மறை விமர்சனம்களை பத்திரிகை மற்றும் முக நூல் வழியாக
காணக்கிடைத்தது.
அதிலும்
குறிப்பாக முஸ்லிம் காங்கிரஸ் இன் தலைவர் கூட இதற்கு ஆட்சேபனை செய்துள்ளது
உண்மையில் கவலை தரும் விடயமாகவே பார்க்கப்பட வேண்டி உள்ளது. இங்கு எனது பதிவு ஒரு
நடுநிலையுடனும் மற்றும் இனவாதம் கலக்காமலும் இருக்கும் என்று நம்புகிறேன்.
முதலாவது
, நாம்
இலங்கை நாடு தற்போது எதிர் நோக்கியுள்ள மாபெரும் பிரச்சனையான இனவாதம் எப்போது , எப்படி , எங்கு , யார் மூலம் தோன்றியது
என்பது குறித்து பல வாதபிரதிவாதம்கள் இருந்தாலும் அது ஒரு நீண்ட ஆய்வுக்கு
உடபடுத்தப்பட்வேண்டி நிக்கின்றது . இப்போது அது பற்றி இங்கு நான் கூற வரவில்லை.
இலங்கை
நாட்டில் பிறந்த ஒரு நபருக்கு அந்நாட்டின் எந்த மூலையிலயும் பணி செய்யும் உரிமை
உண்டு என்பது சகல இனத்தவருக்கும் பொருந்தம் என்பது நம் எல்லாருக்கும் தெரிந்த
விடயம் அவ்வாறு இருக்கும் போது , இங்கு நான் மேற்கூறிய
அந்த பிரதேச செயலாளரின் நியமனம் பற்றி ஏன் நம் மக்கள் எதிர் மறையாகவே
சிந்திக்கின்றனர். கொழும்பு போன்ற நகரம்களில் ஒரு
பெரும்பான்மை இன அதிகாரியின் கீழ் பவ்வியமாக நம்மால் பணி செய்ய முடியும் எனின் ஏன்
இங்கு முடியாது.
நம் மக்கள் ஒன்றை இங்கு நன்றாக புரிந்து கொள்ள வேண்டும்
. இனவாதம் என்பது அரசியல் வாதிகளின் தம் அரசியல் இருப்புக்காக பயன்படுத்தும்
துரும்பு சீட்டு ...இங்கு அரசிய வாதிகள் என்பது எல்லா அரசியல் நபர்களையும்
குறித்து நிக்கின்றது ... இங்கு றஊப் ஹக்கீமோ , அல்லது சம்பிக்க
ரணவக்கயோ அல்லது விமல் வீரவன்சவோ யாரும் விதி விலக்கல்ல என்று நாட்டில் மதம்களின்
பெயர்களில் கட்சிகளும், மத
அடையாளம்களுடன் கட்சி நபர்களும் அரசியலில் குதித்தார்களோ அன்று முதல் இனவாதம்
என்னும் பேய் நாட்டில் வந்து உக்காந்து விட்டது. ஒரு மாற்று மத பிதேச செயாலாலரின்
நியமனத்தை கூட நமக்கு பொறுக்க முடியவில்லை ஆனால் நம் எதிர்பார்ப்பு எல்லாம் எல்லா
நகர வணிகம்களும் எம் கையில் இருக்க வேண்டும் அதை பெரும்பான்மை கை கட்டி கொண்டு
பார்க்க வேண்டும்......!
நாங்கள்
பெரும்பான்மை அதிகம் உள்ள ஒரு காரியாலயத்தில் அதிகாரம் செலுத்த வேண்டும் அனால்
எங்களுக்கு ஒரு பெரும்பான்மை இனத்தவன் அதிகாரம் செலுத்த கூடாது. இது என்ன ஒரு
முரண். இங்கு நாம் சிங்கள அல்லது தமிழ் பேரினவாதத்திற்கு வக்காலத்து வாங்கவில்லை, ஆனால் நாம் ஒரு போதும்
தம் சொந்த நிலை சார்ந்து சிந்தித்து இல்லை என்பதை இட்டு மாத்திரமே கவலை
கொள்கிறேன்.
நாம்
எப்பொதும் ஒரு வழி பாதை போலவே சிந்திக்கின்றோம். ஒரு மாற்று மத சகோதரன் நம் பிரதேச
செயலளராக வருவதன் மூலம் நமது சமய விழுமியம்களை அவருக்கு நம் ஒற்றுமையின் மூலமும்
சகிப்புதனமையின் மூலமும் , அல்லது
அவர் சார்ந்த மதத்தில் உள்ள இனவாதிகளின் பொய் பிரசாரம்களை சுக்குநூறாக
சிதைக்கக்கூடிய முறையில் எத்தி வைக்க அல்லது வைத்திருக்க வேண்டும் என்பதே என்
எதிர்பார்ப்பு. அனால் இங்கு எரிகின்ற நெருப்பில் என்னை விடுவது போல நம் அரசியல்
சாக்கடைகள் அறிக்கை விடுவது, ஒரு வேளை அந்த மாற்று
மத நபரை பேரினவாதிகளின் இஸ்லாம் சார்ந்த பொய் கருத்துக்களுக்கு ஆமா சொல்ல வைக்காது
என்பதில் என்ன நிச்சயம்.
இதற்கு
முன்னிய காலம்களில் கூட அதாவது இந்த மதம் சார்ந்த கட்சிகளின் வருகைகளின் முன்னர்
நமது மண்ணில் எந்த ஒரு அந்நியனும் அரச அலுவலகம்களிலும், பாடசாலைகளிலும் வேலை
செய்ய வில்லையா. அப்போது எங்கே சென்றது இந்த பிரித்தாளும் தன்மை இங்கு
எல்லா அரசியல் சாக்கடைகளும் எதோ ஒரு வகையில் பாமர மக்களுக்கும் ஏன் படித்த
மக்களுக்கும் இனவாதம் என்னும் விசத்தை மெதுவாக செலுத்தி கொண்டு தான்
இருக்கின்றனர். அதில் அவர்கள் வெற்றியும் கண்டு கொண்டுதானிருக்கின்றனர்.
என்னை
பொறுத்த மட்டில் நாட்டில் சிங்களவர்களை விட தமிழனும், முஸ்லிம் மக்களுமே
இனவாதம் என்னும் பிடியில் அரசியல் கட்சிகளால் மாட்டி விடப்பட்டுள்ளனர். அதனால்தான்
இங்கு முஸ்லிம் மற்றும் தமிழ் என்று சொல்லும் கட்சிகள் எல்லாம் பிழைப்பு நடத்த
முடிகின்றது . சிங்கள பெரும்பான்மை மக்கள் இனவாதத்தை ஆதரித்தால் அல்லது ஆதரித்து
இருந்திருந்தால் இந்நேரம் நமது நாடு ஒரு ஜாதிக ஹெல உரிமையினால் அல்லது பொது பல
சேனா போன்றவர்களால் ஆளப்பட்டுக்கொண்டிருக்கும் என்பது ஒரு நிதர்சன உண்மை.
ஆக
சகிப்பும் பொறுமையும் மிகுந்த இஸ்லாம் மார்க்கத்தை பின் பற்றும் முஸ்லிகளாகிய நாம்
பிரித்தாளும் ஒரு ஈனத்தனத்தை விட்டும் நம் மக்களை தூர மாக்க வேண்டும். அவர்கள் செய்தால்
நாங்களும் செய்வோம் என்று ஆரம்பித்தால் அது ஒரு சங்கிலி போல தொடர்ந்து ஒரு
முடிவில்லா தண்டவாளம் போல செல்லுமே ஒழிய தீர்வுக்கு வழி செய்யாது .
பொறுமை
மற்றும் சகிப்புத்தன்மை என்பது ஒரு போதும் தோல்வியை தராது. அது மட்டுமல்ல நமது
இஸ்லாமிய வீரம் பற்றி அவர்கள் அறியாமலும் இல்லை.
ஆகவே , இலங்கையில் உள்ள சகல
அரசியல் வாதிகளுக்கும் நான் இந்த பதிவு மூலம் வினயாமாக கேட்டுக்கொள்வது , உங்கள் தேவைக்காக
மக்களை இனவாதம் என்னும் இம்சைக்குள் நுழைக்க வார்த்தை ஜாலம்கள் மூலமும் அறிக்கை
மூலமும் நஞ்சை பரப்பாதீர்.
0 comments:
Post a Comment