• Latest News

    June 06, 2014

    தெல்கொட- கம்பஹாவுக்கு பஸ் சேவையை ஆரம்பிக்குமாறு கோரிக்கை

    எஸ்.அஷ்ரப்கான்;
    கடுவலையிலிருந்து மல்வானை உளகிட்டிவல ஊடாக தெல்கொட, கம்பஹா வரையான போக்கு வரத்து பஸ் சேவையை உடனடியாக ஆரம்பிக்குமாறு மல்வான உளகிட்டிவல பிரதேச மக்களும், நாளாந்த பயணிகளும் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

    தினமும் காலை 6.45 மற்றும் 7.45 மணிக்குமாக இரு தடவைகள் மாத்திரமே இக்குறிப்பிட்ட பிரதேசத்தால் பஸ் போகின்றது. ஆனால் குறிப்பிட்ட நேரம் தவிர்ந்த ஏனைய நேரங்களில் பயணம் மேற்கொள்ளும் அரச ஊழியர்கள், பொதுமக்களும் கொழும்பு மற்றும் இதர இடங்களுக்கு அவசர தேவைகளுக்காக பயணம் செய்வதற்கு பெரும் பணத்தை செலவு செய்து பயணிக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலை காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
    மேலும் உரிய நேரத்திற்கு தமது தேவைகளை நிவர்த்தி செய்து கொள்ள முடியாமலும் உள்ளதாக சம்மந்தப்பட்ட பிரதேசவாசிகள் குறிப்பிடுவதோடு, இது விடயமாக பல முறை பிரதேச அரசியல் வாதிகளிடம் குறிப்பிட்டும் தொடர்ந்தும் தேர்தல்கால  வாக்குறுதியாகவே இவ்விடயம்  சொல்லப்பட்டு வருகிறதே தவிர இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாமை பெரும் வேதனையளிப்பதாகவும் தெரிவிக்கின்றனர்.

    மிக நீண்டகால பிரச்சினையாக உள்ள இப்பிரதேச போக்கு வரத்து பிரச்சினைக்கான தீர்வினை பிரதேச அரசியல் பிரமுகர்களும், சம்மந்தப்பட்ட போக்குவரத்து துறைசார் உயர் அதிகாரிகளும் மேற்கொள்ளுமாறு பிரஸ்தாப மக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: தெல்கொட- கம்பஹாவுக்கு பஸ் சேவையை ஆரம்பிக்குமாறு கோரிக்கை Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top