• Latest News

    June 19, 2014

    அட்டாளைச்சேனையில் ஹர்த்தால் பேரணி: பதற்ற சூழ் நிலை

    எம்.வை.அமீர்;
    அளுத்கமை, தர்காநகர், பேருவளை மற்றும் பெலிப்பன்னை பிரதேசங்களில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட இனவெளித் தாக்குதல்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து அட்டாளைச்சேனையில் இன்று ஹர்த்தால் அனுஷ்ட்டிக்கப்படும். இதேவேளை அமைதி ஊர்வலம் ஒன்றும் இடம் பெற்றது.

    இதன் பின்னர் ஜனாதிபதிக்கு கையளிக்கும் வகையில் மகஜர் ஒன்றை ஊர்வலத்தில் கலந்து கொண்டோர்  அட்டாளைச்சேனை உதவி பிரதேச செயலாளரிடம் வழங்கினார்கள்.

    இந்நிலையில்  விஷேட அதிரடிப்படியினர் ஊர்வலத்தில் பங்குகொண்டவர்கள்மீது தாக்குதலை மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

    அட்டாளைச்சேனை பிரதேச சபை தவிசாளர் எம்.ஏ.எம். அன்சில் தாக்குதலுக்கு உட்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இத்தாக்குதல் சம்பவம் பற்றி அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தில் விசேட அதிரடிப்படை அதிகாரிகளுக்கும், பொலிஸாருக்கும், அட்டாளைச்சேனை தவிசாளர் அன்ஸில், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எம்.நசீர், கிழக்கு மாகாண சபையின் மற்றுமொரு உறுப்பினரான ஏ.எம்.தவம் உள்ளிட்டவர்களிடையே கலந்துரையாடல் ஒன்றும் இடம் பெற்றது. குறித்த தாக்குதல் சம்பவம் பற்றி விசாரணை செய்து நடவடிக்கை எடுப்பதாக விசேட அதிரடிப் படையின்  அதிகாhழ தெரிவித்துள்ளார்.

    குறித்த ஊர்வலத்தில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.எம். நஸீர், அட்டாளைச்சேனை பிரதேச சபை தவிசாளர் எம்.ஏ.எம். அன்சில்இ கல்முனை மாநர சபை உறுப்பினர் ஏ.எம். பறக்கத்துள்ளாஹ், பிரதேச சபை உறுப்பினர் எஸ்.எல்.முனாஸ் மற்றும் பெருந்திரளான மக்களும் கலந்துகொண்டிருந்தனர்.

     




     
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: அட்டாளைச்சேனையில் ஹர்த்தால் பேரணி: பதற்ற சூழ் நிலை Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top