ஆதம்பாவா வாக்கீர் ஹுசைன் -
கடந்த
வாரம் ஒரு திகைப்பும் , நகைப்பும்
கூடிய ஒரு செய்தி நம் காதுகளுக்கு எட்டியது. அது ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ்
இன் தலைவர் மீதான நம்பிக்கை இல்லா பிரேரணை என்னும் ஒரு இன்னுமொரு அரேங்கேற்றத்தின்
ஆரம்பம்.
ஒரு
சமூகத்து மக்களின் அதிகப்படியான ஆதரவை பெற்று அதன் மூலம் அம்மக்களின்
பிரதிநிதிகளாக பாராளமன்றில் நுழைந்து பின் ஒரு மன்னராட்சி போன்றதொரு ஆளும்
முறைக்கு (18 சட்ட மூலம் ) ஆதரவு தெரிவித்து அதை பெருமையாக கருதி பின்
ஊரெல்லாம் சிலாகித்து, பெருமை
பேசி திரிந்த ஒரு அரச அமைச்சருக்கு எதிராக அதுவும் முஸ்லிம் மக்களின் தானை தலைவன்
என்று உலாவி வரும் தலைவனுக்கு ஏற்பட்டுள்ள இந்நிலை உண்மையில் அவருக்கு
ஏற்படப்போகின்ற இக்காட்டான நிலை என்பதை விட அவர் சார்ந்த கட்சிக்கும் வாக்களித்த
மக்களுக்கு எதிரான ஒரு நம்பிக்கை இல்லா பிரேரணை போன்றே இதை நோக்க வேண்டியுள்ளது.
தேர்தல்
அல்லது தேர்தல்களுக்கான முரசு மெது மெதுவாக பறையப்பட்டுக்கொண்டிருக்கும்
இந்நாட்களில் அரசின் இம்முன்னெடுப்பானது பலத்த சந்தேகம்களை ஏற்படுத்தாமலும் இல்லை.
இருந்தும் மிகவும் நீண்ட காலத்துக்கு முன் ஆரம்பிக்கப்பட்டு அவ்வப்போது
பேரினவாதிகளுக்கு உசுப்பேத்த உடைக்கப்படும் பள்ளியான தம்புள்ள விவகாரத்தை, தலைவர் ஏன் எல்லாம்
கடந்த பின் , பள்ளி
உடைந்த பின் , மானம்
போன பின் , நமது
ரோசம் களையப்பட்ட பின் கையில் எடுக்க வேண்டும். ஒரு வேளை இம்முறை தேர்தலில்
ஓரளவுக்கேனும் வெற்றி பெறுவதற்கு அதுதான் அஸ்திரமா ? அல்லது காலம் கடந்த
ஞானமா ??
இங்கு
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் இன் தலமை ஒரு மிகவும் இக்காட்டன , இரண்டும் கெட்டான்
நிலைமைக்கு தற்போது மெது மெதுவாக இலங்கையின் இரண்டு பெரிய கட்சிகளான UNP
, மற்றும்
UPFA இனால் தள்ளப்பட்டு கொண்டிருப்பது முஸ்லிம் காங்கிரஸ்
எனும் கட்சிக்கு ஒரு பொருட்டாக இல்லாமல் இருந்தாலும் அதை நம்பி வாக்களித்த
மக்களுக்கு ஒரு பெரும் இழப்பாகவே இருக்கும்.
ஏற்கனவே
தலைவர் M.H.M.Ashraff அவர்களின் மறைவிற்கு பின் பேரம் பேசும் அல்லது King
Makers என்னும்
நிலையில் இருந்து படிப்படியாக கீழிறங்கி அரசாங்கம் அழைக்காமல் சேரும் அளவுக்கும் , அதே அரசு வெளியே போ
என்று சொல்லியும் போகாமல் இருக்கும் நிலையில் உள்ள நம் கட்சியின் எதிர்கால நிலையை
எண்ணி யார்தான் கவலை கொள்ளாமல் இருப்பார். ஏன் அதன் பரம எதிரிகள் கூட சற்று
அதிர்ந்து தான் போவர்.
இது
போன்ற சூழ்நிலையில் , அரசு
மேட்கொள்ளவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணைக்கு பிரதான எதிர் கட்சியும் ஆதரவு
அளிக்கும் என்பது இனி முஸ்லிம் காங்கிரஸ் எனும் கட்சியை ஒரு போதும் அது
கூட்டணிக்கு அளிக்காது என்பதகுரிய முன்னறிவிப்பா ??
இவை
எல்லாம் வெறும் ஊகம்களாக இருந்தாலும் அவை வெறும் ஊகம்களாக மட்டுமே இருக்க வேண்டும்
என்பதுதான் எம் எல்லோரினதும் எதிர்பார்ப்பு. இருந்தும் ஒரு வேளை இலங்கை
முஸ்லிம்கள் மத்தியில் மதிப்பிழந்து சென்று கொண்டிருக்கும் முஸ்லிம் காங்கிரஸ் இன்
கரத்தை பலப்படுத்த அரசின் ஆசீர்வ்வததுடன் ஒழுங்கு செய்யப்பட இன்னுமொரு நாடகமா என்பது
குறித்தும் இங்கு ஒரு சந்தேகம் இல்லாமல் இல்லை, ஆனால் , அரசுக்கு முஸ்லிம்
காங்கிரஸ் இன் எழுச்சி ஒரு போதும் ஜீரணிக்க முடியாத ஒன்றாக இருப்பதனால் , நிச்சயமாக இது அரசும் , பிரதான எதிர்கட்சியும்
சேர்ந்து ஆரம்பித்துள்ள பழி வாங்கல் நடவடிக்கையே அன்றி வேறு எதுவுமில்லை.
உண்மையில், முஸ்லிம்
காங்கிரஸ் இவ்விடயத்தில் கொஞ்சம் பெருமை பட்டுக்கொள்ளலாம். ஆளும் கட்சியும் எதிர்
கட்சியும் ஒன்றான பெருமைதான் அது.
இருந்தும்
, முஸ்லிம்
காங்கிரஸ் இன் தலைமையின் சாணக்கியம் எல்லாரும் அறிந்த உண்மை என்றாலும் இங்கு என்ன
நடந்தாலும் வெற்றி தலைமைக்கே என்பது மட்டும் உறுதி....அரசு மற்றும் எதிர்
கட்சிகளின் இந்த முன்னெடுப்பு இன்னும் மக்கள் மீது முஸ்லிம் காங்கிரஸ் இன்
நன்மதிப்பை கூட்டும் என்பது என் கணிப்பு , இருந்தும் அரசியலில்
எதிரியும் இல்லை நண்பனும் இல்லை என்பதற்கு ஏற்ப காட்சிகள் மாறவும் கூடும்
(உண்மையில் இந்த சொற்றொடர் இவ்வாறு இருந்தால் நன்றாக இருக்கும் ""
அரசியலில் ரோசமும் இல்லை, ரோசம்
இல்லாமலும் இல்லை )
ஆக
, இங்கு
தம்புள்ளை பள்ளி விவகாரம் சிங்கள அரசியலுக்கு மட்டுமல்ல, முஸ்லிம் அரசியலுக்கும், அரசியல்வாதிகளுக்கும்
அவ்வப்போது தொட்டுக்கொள்ள தேவைப்படும் ஊறுகாய் போல்தான் உள்ளது என்பது மட்டும்
நிதர்சனம். தலைவர் தமக்கு சுருதி குறையும் போது கையில் எடுக்கும் இவ்விடயம்
அரசுக்கு சுருதியை அதிகரிக்கும் என்பது அவருக்கு தெரியாமலா போய்விட்டது என்பது
மட்டும் புரியாத புதிராகவே இன்னும் என் மனதில்.
பொறுத்திருந்து
பாப்போம் .
0 comments:
Post a Comment