
ஜாதிக பல சேனா இயக்கத்தின் தலைவரும்
மஹிங்கனை பிரதேச சபையின் உறுப்பினருமான வட்டரக்கே விஜித தேரர் இனந்தெரியாத
நபர்களினால் கடத்திச் செல்லப்பட்டு தாக்கப்பட்டுள்ளார்.பாணந்துறை ஹிரன
பாலத்திற்கு
(படங்கள்)
அருகாமையில் விஜித தேரர் கை, கால்கள்
கட்டப்பட்ட நிலையில் கிடந்த போது கண்டு பிடிக்கப்பட்டுள்ளார். விஜித தேரர்
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகத்
தெரிவிக்கப்படுகிறது.
இவர் கடுமையாக தாக்கப்பட்டு உடல் நிலை
மோசமான உள்ளத்தால இவரிடமிருந்து வாக்குமூலம் பெற்றுக்கொள்ள முடியாதுள்ளதாக
பொலிசார் தெரிவித்துள்ளனர் .விஜித தேரர், பொதுபல சேனா இயக்கத்தை கடுமையாக
விமர்சனம் செய்து அதன் நடவடிக்கைகளுக்கு எதிர்பு வெளியிட்டு வந்தார் . இவர்
பெளத்த தீவிரவாத அமைப்புக்களினால் கடுமையான உயிர் அச்சுறுத்தலை
எதிர்கொண்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
படங்கள் லங்காதீப
0 comments:
Post a Comment