• Latest News

    July 13, 2014

    உலகில் அதிக சனத்தொகையை இரண்டாவது பெரிய நகரமாக டில்லி

    அதிக மக்கள்தொகை கொண்ட உலகின் 2-வது மிகப்பெரிய நகராக டெல்லி உருவெடுத்துள்ளது. உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு அதிக மக்கள் தொகை கொண்ட நகரங்களின் பட்டியலை ஐ.நா. சபை கடந்த வியாழக்கிழமை வெளியிட்டது.

    இதில் முதலிடத்தை ஜப்பான் தலைநகரம் டோக்கியோ பிடித்துள்ளது. அந்த நகர மக்கள் தொகை 3 கோடியே 80 லட்சம் ஆகும். அதற்கு அடுத்த இடத்தை இந்திய தலைநகர் டெல்லி பிடித்துள்ளது. டெல்லி மக்கள் தொகை இரண்டரை கோடியாகும். 2030-ம் ஆண்டு வரை இரண்டாவது இடத்தை டெல்லி தக்க வைக்கும் என்றும் 2030-ம் ஆண்டில் டெல்லியின் மக்கள் தொகை 3.6 கோடியாக உயரும் என்று ஐ.நா. சபை தெரிவித்துள்ளது.
    ஐ.நா. பட்டியலில் சீனாவின் வர்த்தக நகரான ஷாங்காய் 2.3 கோடி மக்கள் தொகையுடன் 3-வது இடத்தில் உள்ளது. அடுத்தடுத்த இடங்களை மெக்ஸிகோ சிட்டி, மும்பை (2.1 கோடி), சாவ் பாலோ (பிரேசில்) ஆகியவை பெற்றுள்ளன. 2030-ம் ஆண்டில் மும்பை மக்கள் தொகை 2.8 கோடியுடன் 4-வது இடத்துக்கு முன்னேறிவிடுமாம்.

    தற்போதைய ஆய்வின்படி சீன நகரங்களில்தான் அதிக எண்ணிக்கையிலான மக்கள் வசிக்கிறார்கள். வரும் 2050-ம் ஆண்டில் சீனாவை பின்னுக்குத் தள்ளிவிட்டு இந்தியா முதலிடத்துக்கு முன்னேறிவிடும். இந்திய நகரங்களின் தற்போதைய மக்கள் தொகை 41 கோடியாகும். 2050-ம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 81.4 கோடியாக அதிகரிக்கும் என்று ஐ.நா. சபை தெரிவித்துள்ளது.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: உலகில் அதிக சனத்தொகையை இரண்டாவது பெரிய நகரமாக டில்லி Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top