எஸ்.அஷ்ரப்கான்: கல்முனை அன்ஸாரிஸ் ஸூன்னதில் முஹம்மதிய்யா ஜூம்ஆ பெரிய பள்ளிவாயல் மற்றும் ஹூதா பள்ளிவாயல் இணைந்து ஏற்பாடு செய்த புனித நோன்புப் பெருநாள் தொழுகை இன்று செவ்வாய் கிழமை (29) காலை 6.30 மணிக்கு கல்முனை கடற்கரை வீதியில் அமைந்துள்ள ஹூதா திடலில் இடம்பெற்றது.
இந்த நபிவழித்தொழுகையில் வழமைபோன்று ஆண்,பெண் இருபாலாருக்கும் ஒரே தடவையில் ஒரே ஜமாஅத்தாக தொழுகை நடாத்தப்பட்டது.
இம்முறை வழமையை விடவும் பெருந்திரளான கல்முனை பிரதேச மக்கள் இங்கு தொழுகையில் ஈடுபட்டிருந்ததனால் 6.30 மணிக்கு ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டிருந்த தொழுகை 7 மணிக்கே இடம்பெற்றது. பெரும் இட நெருக்கடியையும் கல்முனை ஹூதா திடலில் காணக்கூடியதாக இருந்தது.
பெருநாள் தொழுகை மற்றும் மார்க்க சொற்பொழிவு (குத்பாவை) கல்முனை அன்ஸாரிஸ் ஸூன்னதில் முஹம்மதிய்யா ஜூம்ஆ பெரிய பள்ளிவாயல் பேஷ் இமாம் ஏ.எல்.எம். ஸபீர் (கபூரி) நடாத்தினார். இந்த குத்பாவில் விசேடமாக பலஸ்தீன் காஸா பிரதேசத்தில் காட்டு மிராண்டிகளான இஸ்ரேலின் தாக்குதலால் கொல்லப்பட்டும், நிம்மதி இழந்தும், துன்பங்களை அனுபவித்து வரும் எமது முஸ்லிம் இரத்தங்களுக்காக துஆ செய்யுமாறும் அவர்களின் துன்பங்களில் பங்குகொள்ளும் வகையில் இந்த பெருநாளை கொண்டாடுமாறும் இலங்கைத்திருநாட்டின் முஸ்லிம்களுக்கு விசேட வேண்டுகோளை மௌலவி ஸபீர் விடுத்தார். அத்துடன் கயவர்களான இஸ்ரேலியர்களின் தயாரிப்புக்கள் மற்றும் தனது தயாரிப்புக்கள் மூலம் இஸ்ரேலுக்கு நிதி உதவி வழங்கும் தயாரிப்புக்களை பகிஸ்கரிக்குமாறும் அப்பொருட்களை காட்சிப்படுத்தி பகிரங்க வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
0 comments:
Post a Comment