• Latest News

    September 27, 2014

    ஜெ.,, க்கு 4 ஆண்டு சிறை; ரூ.100 கோடி அபராதம்; எம்.எல்.ஏ., பதவி பறிக்க உத்தரவு

    சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு சிறைத்தண்டனையும் 100 கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் அவருடைய எம்எல்ஏ., பதவியையும் பறிக்க நீதிபதி உத்தரவிட்டார். 

    இதைத் .தொடர்ந்து ஜெயலலிதா, பரப்பன அக்ரகாரம் சிறையில் அடைக்கப்பட்டார். ஜெயலலிதா விரும்பினால் தமிழக சிறைக்கு மாறிக் கொள்ளலாம். இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோரும் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மூவருக்கும் 4 ஆண்டு சிறைத் தண்டனையும் தலா 25 கோடி ரூபாய்
    அபராதமும் விதிக்கப்பட்டது. இதற்கிடையில் கோர்ட் அறையிலிருந்து ஜெயலலிதா வெளியே வந்து அமைச்சர் பன்னீர் செல்வத்தை சந்தித்து சென்றார்.112 பக்க தீர்ப்பை நீதிபதி குன்கா படித்தார். தண்டனை முழு விவரம் அறிவிக்கப்படும் முன்பே, ஜெயலலிதாவை கோர்ட் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். குற்றவாளி என அறிவிக்கப்பட்டதால்இ, ஜெயலலிதா முதல்வர் பதவியை இழக்கிறார்.

    இதற்கிடையில் ஜெயலலிதா குற்றவாளி என அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் போக்குவரத்து நிறுத்தப்பட்டது; கடைகள் அடைக்கப்பட்டன. . இந்நிலையில், 18 ஆண்டுகளுக்கு முன்னர் இந்த வலக்கை பதிவு செய்த  சுப்ரமணியசாமி வீ்ட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    அதேவேளை இந்த தீர்ப்புக்கு எதிராக மேல் முறையீடு செய்ய முடியும் என சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர்
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: ஜெ.,, க்கு 4 ஆண்டு சிறை; ரூ.100 கோடி அபராதம்; எம்.எல்.ஏ., பதவி பறிக்க உத்தரவு Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top