• Latest News

    September 26, 2014

    ஜனாதிபதி அமெரிக்காவிலிருந்து நாடுதிரும்பியவுடன் பிரதமர் பதவியில் மாற்றம்

    ஜனாதிபதி அமெரிக்காவிலிருந்து நாடுதிரும்பியவுடன் பிரதமர் பதவியில் மாற்றம் ஏற்படவுள்ளதாக அலரி மாளிகைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
    எதிர்வரும் தேர்தல்களை கவனத்திற் கொண்டு இந்த மாற்றம் மேற்கொள்ளப்படவுள்ளது. பெரும்பாலும் அடுத்த நாடாளுமன்றத் தேர்தல் வரையான குறுகிய காலப்பகுதிக்கு மட்டுமே புதிதாக ஒருவர் பிரதமர் பதவிக்கு அமர்த்தப்படுவார் என்று தெரிய வருகின்றது.

    தற்போதுள்ள நிலையில் ராஜபக்ஷ குடும்பத்திலிருந்து அல்லது அவர்களுக்கு கீழ்ப்படிவுள்ள ஒருவர் பிரதமராக வரவேண்டுமென்பதே ஜனாதிபதியின் விருப்பமாகும்.


    இதன் காரணமாக அமைச்சர்களான பசில் அல்லது பவித்ரா வன்னியாரச்சி ஆகிய இருவரில் ஒருவர் பிரதமர் பதவிக்கு நியமிக்கப்படும் வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    பசில் ராஜபக்ஷ ஜனாதிபதியின் சகோதரர் மட்டுமன்றி, ஆளுங்கட்சியின் செயற்திறன் மிக்க அமைச்சருமாவார். மேலும் ஆளுங்கட்சியின் தேர்தல் பிரச்சாரம், கொள்கை முன்னெடுப்புகள் என்பனவும் அவரது தலைமைத்துவத்தின் கீழேயே நடைபெறுகின்றன.

    இவர்களில் ஒருவரை பிரதமர் பதவிக்கு நியமிக்கும் போது அடுத்த பொதுத் தேர்தலின் பின் நாமல் ராஜபக்ஷவை பிரதமராக்கும் ஜனாதிபதியின் எண்ணத்துக்கு தடைவராது என்பது அவரது எதிர்பார்ப்பாகும்.

    இதே வேளை பதவி பறிக்கப்படும் பிரதமர் டீ.எம். ஜயரத்தினவை திருப்திப்படுத்தும் நோக்கில் அவரது மகன் அனுராத ஜயரத்தினவுக்கு மத்திய மாகாணத்தின் முதலமைச்சா் பதவி வழங்கப்படவுள்ளதாக தெரிய வந்துள்ளது.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: ஜனாதிபதி அமெரிக்காவிலிருந்து நாடுதிரும்பியவுடன் பிரதமர் பதவியில் மாற்றம் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top