• Latest News

    September 21, 2014

    40 ஆயிரத்து 78 விருப்பு வாக்குகளை இழந்த சஷீந்திர ராஜபக்ச!

    ஊவா மாகாண சபைத் தேர்தலில் மொனராகலை மாவட்டத்தில் போட்டியிட்ட அந்த மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ 2009ம் ஆண்டு தேர்தலுடன் ஒப்பிடும் போது இம்முறை 40 ஆயிரத்து 78 விருப்பு வாக்குகளை குறைவாக பெற்றுள்ளார்.

    கடந்த தேர்தலில் அவர் ஒரு லட்சத்து 36 ஆயிரத்து 697 விருப்பு வாக்குகளை பெற்றிருந்தார்.

    எவ்வாறாயினும் மாவட்டத்தில் விருப்பு வாக்கு பட்டியலில் அவர் இம்முறையும் முதலிடத்தை பிடித்துள்ளார்.
    ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கீழ் போட்டியிட்ட வேட்பாளர்களின் விருப்பு வாக்குகள் வெளியாகியுள்ளன.

    அதில் வெற்றி பெற்றவர்களின் விபரங்கள்.

    சஷீந்திர ராஜபக்ச - 96,619

    ஆனந்த குமாரசிறி ரத்நாயக்க 59, 285

    உதார சொய்சா (அமைச்சர் விஜித் முனி சொய்சாவின் மகன்) 48,512

    சாலிய சுமேத (அமைச்சர் சுமேதா ஜீ. ஜயசேகவின் மகன்) 21, 206

    செனரத் அத்தநாயக்க 19,448

    விமல் கமகம ஆராச்சி 17,725

    ஹரேந்திர தர்மதாச 15, 843

    பத்ம உதயஷாந்த குணசேகர 12,412

    தயாரத்ன பண்டார 12, 046

    அதேவேளை மொனராகலை மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றியீட்டியவர்களின் விபரம்.

    ஆனந்த குமாரசிறி 24, 421

    டப்ளியூ.எச்.எம். தர்மசேன 18,400

    ஜானக திஸ்ஸ குட்டியாராச்சி 18,265

    ஜயசிங்க பண்டார 16, 437

    சம்பத் ஜயசூரிய 15, 835

    ரோய் டி சில்வா 13,619

    அதேவேளை ஜே.வி.பியின் சார்பில் மொனராகலை மாவட்டத்தில் போட்டியிட்ட ஆர்.எம். ஜயவர்தன என்பவர் 5785 வாக்குகளை பெற்று தெரிவாகியுள்ளார்.

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: 40 ஆயிரத்து 78 விருப்பு வாக்குகளை இழந்த சஷீந்திர ராஜபக்ச! Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top