• Latest News

    September 09, 2014

    பற்களை கழற்றினால் 6 மாதத்துக்குள் செயற்கை பற்களை பொருத்திக் கொள்ள வேண்டும்

    (நேர்காணல்: எஸ்.தயா)
    'பல் போனால் சொல் போச்சு 'என்­பது பழ­மொழி. அதுவும் சிறு வயதில் பல் போனால்  முக அழகு பாதிக்கப்படும், உண்­பதில் சிரமம் ஏற்­படும். பல் சொத்­தையைக் கண்டு கொள்­ளாமல் விட்டால் அது பல்லின் வேரை பலம் இழக்கச் செய்து பல்லை இழக்கும் நிலைக்கு தள்­ளி­விடும்.  தற்போதுள்ள சிகிச்சை முறை­களின் மூலம் பல்லின் வேர்ப்­ப­கு­தியை பாது­காத்து பல் விழாமல் காத்துக் கொள்ள முடியும். சொத்தைப் பல்­லுக்கு ஆரம்­பத்­தி­லேயே வேர் சிகிச்சை செய்­வதன் மூலம் பல்லை பாது­காக்க முடியும் என்­கிறார் பல் வைத்­திய நிபுணர் மீராஸ் முக்தார்.

     பற்சுகாதாரம் குறித்து அவர் மேலும் கூறியதாவது,
    பல்லில் பாதிப்பு ஏற்­படும் முன்­னரே வைத்­தி­யரை நாடி, பற்­களை பரி­சோ­தித்துக் கொள்­ள­வேண்டும். உதா­ர­ண­மாக பற்கள் பாதிக்­கப்­பட்டு வீக்கத்துடன் வரு­வோருக்கு நாம் உட­ன­டியாக சிகிச்சை வழங்­கு­வது குறைவு. ஓர­ளவு சிறி­தாக வீக்கம் இருப்­ப­வர்­க­ளுக்கு பல் நீக்­கப்­படும். ஆனால், பெரி­ய­ளவில் வீக்கம் உடை­ய­வர்­க­ளுக்கு பற்கள் நீக்­கப்­பட மாட்டாது. அவர்­க­ளுக்கு ஏற்ற மாத்­திரைகளை வழங்கி ஒரு குறிப்­பிட்ட நாளில் தான் பற்­களை கழற்றுவோம்.

    சிறு வயதிலிருந்தே பற்­களை ஆரோக்கியமாக வைப்­பதில் கவனம் செலுத்த வேண்டும். பல் வலிக்க ஆரம்­பித்த பின்னர் தான் மருத்­து­வரைப் பார்க்க வேண்டும் என்ற எண்­ணமே பல­ருக்கும் உள்­ளது.
    குழந்­தை­க­ளுக்கு பல் முளைக்க ஆரம்­பித்­ததில் இருந்து தினமும் இரு­தடவை பல்­து­லக்க வேண்டும். பல்லின் இடுக்­கு­களில் உணவுப் பொருட்கள் படி­யாமல் பார்த்துக் கொள்­ள­வேண்டும். அவ்­வாறு சிக்கிக் கொண்டால் வாயைக் கொப்­ப­ளித்து உட­ன­டி­யாகப் பல்லை சுத்தம் செய்ய வேண்டும்.

    சத்துக் குறை­பா­டான உண­வுகள் மற்றும் உடலில் ஏற்­படும் சர்க்­கரை உள்­ளிட்ட மற்ற நோய்­களின் கார­ண­மா­கவும் பல் ஆரோக்­கியம் அதிகம் பாதிக்கப்பட வாய்ப்­புள்­ளது.

    எச்­சிலில் உள்ள அசிட் மற்றும் உணவில் உள்ள கார்­போ­ஹை­ரேட்டும் சேர்ந்து பல்லில் சொத்­தையை உரு­வாக்­கு­கின்­றன. பல் சொத்தை பெரி­தாக வளர்ந்து பல்லின் வேரைத் தாக்கும் போது தான் வலி ஏற்­ப­டு­கி­றது. இந்த வலியை கண்டு கொள்­ளாமல் விட்­டு­விட்டால் பல்லின் வேர்ப்­ப­குதி முழு­வதும் பாதிக்­கப்­பட்டு பல்லை முழு­மை­யாக இழக்கும் நிலை ஏற்­படும்.

    பல்லில் சொத்தை ஏற்­ப­டாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் அல்­லது பல் சொத்தை வாயில் வலியை ஏற்­ப­டுத்தும் போதே பல் மருத்­து­வ­ரிடம் காட்டி வேர் சிகிச்சை மூலம் பாது­காத்துக் கொள்­ளலாம். வேரின் தன்­மையைப் பொறுத்து பல்லின் ஆயுள் கூடும். பல்லின் வேர்ப்­ப­கு­தியில் பாதிப்பு ஆரம்­பித்த உடனே கண்­ட­றிந்தால் செயற்கை வேர் வைத்து பல்லை உறு­தி­யாக்கி அதன் மீது உரை போட்டு பல்லை உயி­ருடன் காப்­பாற்றி விட முடியும். இந்த வேர் சிகிச்­சையின் மூலம் பல ஆண்­டு­க­ளுக்கு பல்லைக் காப்­பாற்­றலாம். வேர் சிகிச்சை என்­பது எந்த வய­தி­ன­ருக்கும் செய்­யலாம்.

    பல்லில் ஏற்­படும் பல் கூச்சம், ஈறு வீக்கம், பல் சொத்தை, வாய் நாற்றம் உள்­ளிட்ட எந்தப் பிரச்சினையாக இருந்­தாலும் உட­ன­டி­யாக பல் மருத்­து­வரை அணுகி சிகிச்சை செய்து கொள்­வதன் மூலம் பல்லின் ஆரோக்கியத்­தையும், முகத்தின் அழ­கையும் பாது­காக்க முடியும்.

    பற்­களின் அமைப்பு ஒழுங்­கற்ற­தாகக் காணப்­ப­டு­ப­வர்­க­ளுக்கு பற்­க­ளுக்கு கிளி­ப் பா­விப்­பதால் அவர்­களின் பற்­களை சரி செய்து கொள்­ள­முடியும். பற்கள் முன்­பக்கம் நீண்டு இருப்­ப­வர்­களுக்கு பற்கள் உள்ளே செல்ல பல்­லுக்கு கிளிப் பொருத்தும் போது பற்­களில் இட வசதி இல்லாமல் இருந்தால் முன்­பக்­கத்தில் கடவாய்ப் பற்கள் இரண்டை நீக்கி விட்டு பொறுத்­து­வதால் பற்கள் சரி­வர வாய்ப்­புள்­ளது.  இந்த கிளிப்களில் நிரந்­த­ர­மானது, தற்­கா­லி­க­மானது என இருவகை உள்­ளது.

    அதா­வது,  உணவு உண்ணும் போது நீக்கி பின் பொருத்துதல், மற்றது நிரந்­த­ர­மான பல் கிளிப். ஒரு குறிப்­பிட காலம் வரை­ நீக்­காமல் பற்கள் உள்ளே சென்ற பிறகு நீக்கக் கூடி­ய­வ­கையில் வடி­வ­மைக்­கப்­பட்­டுள்­ளது. வயது எல்லை முக்­கி­ய­மா­னது. உதா­ர­ண­மாக 13 வய­துக்­குட்­பட்­ட­வர்­க­ளுக்கு இல­குவில் பற்கள் சீராக அமையும். அதே­வேளை, 25 வய­திற்கு மேற்­பட்­ட­வர்­க­ளுக்கு பொருத்­தினால் கால­தா­ம­த­மா­கவே பற்கள் சீராக அமையும்.

    சாப்­பிட்ட பின்னர் வாயில் எஞ்சி இருக்கும் உணவுத் துகள்­களே பக்­டீ­ரி­யாக்கள் பெருகுவதற்கு கார­ண­மா­கின்­றன. எனவே ஒவ்­வொரு முறையும் சாப்­பிட்டு முடிந்­ததும் வாயை நன்கு கொப்­ப­ளிக்க வேண்டும். காலை, இரவு என்று தினமும் இரண்டு வேளை பல் துலக்­கு­வது அவ­சியம். இரவு படுக்­கும்­போது உப்புத் தண்­ணீரில் வாய் கொப்­ப­ளித்­து­விட்டுப் படுப்­பது பற்­க­ளுக்கு நல்ல பாது­காப்பைத் தரும். பற்­களை நீண்ட நேரம் துலக்கக் கூடாது. ஏனெனில் அது பல்லின் வெளிப்­பு­றத்தில் உள்ள எனா­மலைத் தேய்த்­து­விடும். மேற்­புற ஈறு­களை மேலே இருந்து கீழா­கவும், கீழ்ப்­புற ஈறு­களை கீழே இருந்து மேலா­கவும் விரலால் அழுத்தித் தேய்த்தால், ஈறுகள் பற்­க­ளுடன் வலு­வாக இணைந்­தி­ருக்கும். உணவுத் துகள்கள் பற்­க­ளுக்கும் ஈறு­களுக்கும் இடையில் தங்­காது. பக்­டீ­ரியா தொற்­றுக்­கான வாய்ப்­புகள் குறையும். துர்­நாற்­றமும் ஏற்­ப­டாது.

    ஈறு­களில் வீக்­கமும் இரத்தக் கசிவும் ஏற்­ப­டாமல் பற்கள் பாது­காக்­கப்­படும். பற்­சி­தைவு ஆரம்­பத்தில் ஒரு சிறிய கரும்­புள்ளியாக பல்லின் மேற்­ப­ரப்பில் தோன்றும். இந்த நிலை­யி­லேயே பல் மருத்­து­வரைச் சந்­தித்து உரிய ஆலோ­ச­னை­யையும் சிகிச்­சை­யையும் பெற்றால் மேற்­கொண்டு பல் சொத்தை ஆகாமல் பாது­காக்­கலாம். ஆனால் மிக ஆழ­மாகக் குழி உண்­டாகி நரம்பு வரை­யிலும் பற்­சி­தைவு ஏற்­பட்­டி­ருந்தால் பற்­களைப் பிடுங்கி எடுக்க வேண்­டிய அவ­சியம் உரு­வாகும். ஆனால் அதற்கு முன்பே பல் மருத்­து­வரை நாடினால் வேர் சிகிச்சை மூலம் பல்லைப் பிடுங்­கா­மலே காப்­பாற்ற முடியும்.

    பற்­களை கழற்றினால்  ஒரு மாதத்தில் இருந்து ஆறு மாதங்­க­ளுக்குள் செயற்கைப் பற்­களைப் பொருத்­திக்­கொள்ள வேண்டும். இல்லை எனில் மேற்­பற்கள் கீழே இறங்­கவோ அல்­லது கீழ்ப் பற்கள் மேலே ஏறவோ அல்­லது பக்­க­வாட்டுப் பற்கள் சரி­யவோ கூடும். இதைத் தவிர்த்து எஞ்­சிய பற்களைப் பாதுகாக்கப் பொய்ப் பற்கள் கட்டிக்கொள்வதுதான் உத்தமம். பற்களால் நகத்தைக் கடித்தல், பென்சில் போன்ற பொருட்களைக் கடித்தல், குண்டூசி மற்றும் குச்சியால் பற்களைக் குத்துதல் போன்ற செயல்களைச் செய்யக் கூடாது. இவை பற்களில் நோய்த் தொற்றினை ஏற்படுத்திவிடும்.

    காபனீரொசைட் கலந்த குளிர்பானங்கள் அருந்துவதைத் தவிர்க்க வேண்டும். இவற்றில் உள்ள அமிலங்கள் பற்களில் உள்ள எனாமலைப் பாதிப்பதோடு பற்களையும் அரிக்கின்றன.

    பானங்களைக் குடித்தே ஆக வேண்டிய சமயங்களில் இயன்றவரை ஸ்ட்ரோ மூலம் அருந்தலாம். பால்புட்டியில் பால் அருந்தியவுடன் குழந்தைகள் அப்படியே உறங்கிவிடுவார்கள்.

    இந்தச் சமயத்தில், பால் பற்கள் பாதிக்கப்படும். எனவே, குழந்தை பால் குடித்த பிறகு சிறிது தண்ணீரைக் குடிக்கச் செய்வது அவசியம். பற்களின் பாதுகாப்புக்கும் இரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது.

    பல் மற்றும் ஈறு தொடர்பான நோய்கள் சர்க்கரை நோயாளிகளுக்கு அதிகம் வர வாய்ப்பிருப்பதால் இரத்தத்தில் சர்க்கரையைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது நல்லது. புகையிலை மற்றும் மதுப் பழக்கம் ஈறுகளில் புற்றுநோயை ஏற்படுத்தும் சாத்தியம் இருப்பதால் அவற்றைத் தவிர்ப்பது பல் பாதுகாப்புக்கு உதவும்.

    மனி­தரின் பற்கள் முகத்தின் கீழ்ப்­பக்கம் இருக்கும் மேல்­தாடை எலும்­பான அனு­வென்­பிலும், கீழ்த்­தாடை எலும்­பான சிபு­க­வென்­பிலும் விளிம்­பு­களில் இருக்கும் சிற்­ற­றை­களில் இறுக்­க­மாகப் பொருத்­தப்­பட்­டி­ருக்கும். இவற்றில் நிலை­யற்ற விழுந்து முளைக்கும் பாற்­பற்கள், நிலை­யான பற்கள் என இரு வகை­யுண்டு. குழந்தை பிறக்­கும்­போதே இந்தப் பற்கள் முதிர்ச்­சி­ய­டை­யாத நிலையில் தாடை என்­பு­க­ளினுள் பொதிந்­தி­ருக்கும்.

    பாற்பற்கள் 
    மனி­தரில் மொத்தம் 32 பற்கள் காணப்­படும். இவற்றில் மேல் தா­டையில் இடப்­புறம் 8 பற்­களும், வலப்­புறம் 8 பற்­களும் இருக்கும். இதேபோல் கீழ்த்­தா­டை­யிலும் இரு புறமும் எட்டு, எட்­டாக மொத்தம் 16 பற்கள் காணப்­படும்.
     
    குழந்­தை­களைப் பொறுத்­த­மட்டில் இவர்­க­ளுக்கு பால் தான் மிக முக்­கி­ய­மான உண­வாக இருக்­கி­றது. காபோ­வை­தரேட் அதி­க­ளவு  பாலில் இருக்­கி­றது. பாலில் அதிக சத்து இருப்­பது போலவே பல்­லுக்கு அதிகம் பாதிப்பை ஏற்­ப­டுத்­து­கின்­றது.

    பெற்­றோர்கள் தான் குழந்­தை­களின் பற்­களை பாது­காப்­ப­திலும், சுத்­த­மாக வைத்­தி­ருப்­ப­திலும் கவனம் செலுத்த வேண்டும். உண­வுகள் பற்­களில் தேங்கி நிற்­பதால் பற்­சொத்தை, பூச்சிப் பல் வர இது ஒரு கார­ண­மாக அமை­கி­றது.  மேலும் குழந்­தை­களை பரா­ம­ரிப்­பதில் தாய்­மார்கள் தான் அதிகம் அங்கம் வகிக்­கின்­றனர். எனவே சிறு­வர்­க­ளுக்கு கொடுக்கும் பால் சூடாக இருக்கும் போது அவற்றை வாயால் ஊதுவதால் தாய்­மார்­களுக்கு பூச்சிப்பல் இருந்தால் குழந்­தை­க­ளுக்கு வர வாய்ப்­புள்­ளது.

    சிறு வயதில் இருந்தே குழந்­தை­க­ளுக்கு பல்லை சுத்­த­மாக வைத்துக் கொள்­வது பற்­றிய விழிப்­பு­ணர்வை ஏற்­ப­டுத்த வேண்டும். தினமும் இரண்டு முறை கட்­டாயம் பல் துலக்க வேண்டும். மாதம் ஒரு முறை பற்தூரி­கையை மாற்ற வேண்டும். பல்லின் தன்­மைக்கு தகுந்த பற்­தூ­ரி­கையை தெரிவு செய்­வது அவ­சியம். பல் இடுக்­கு­களில் உணவுப் பொருட்கள் சேராமல் பாது­காக்க வேண்டும். குளிர்ச்­சி­யான பதார்த்­தங்கள் அடிக்­கடி சாப்­பி­டு­வதை தவிர்க்­கவும்.
     
    வாய்த் துர்நாற்றம்
    ஒழுங்­கான முறையில் பற்­தூரி­கையை பயன்­ப­டுத்­தா­மை. உதா­ர­ண­மாக நாம் அனை­வரும் முன்­பற்­க­ளுக்கு மாத்­திரம் பற்­தூரி­கையை பயன்­ப­டுத்து­கிறோம். ஆனால், அவ்­வாறு செய்­வது உகந்­த­தல்ல. உட்­புற, வெளிப்­புற பற்கள் மீது அதிக கவனம் செலுத்தி அவற்றை நன்­றாக பற்­தூ­ரி­கைகளைக் கொண்டு துலக்க வேண்­டும்.

    பற்­களில் உணவு தேங்­கி­யி­ருப்­ப­தாலும், பல்­லுக்கும் ஈறுக்­கு­மி­டையே சிறு இடை­வெளி ஆரம்­பித்து அதன் பிறகு பெரி­யவில் ஈறு­களை பாதிக்கச் செய்­கின்­றது.  நாக்கில் பற்கள் படு­வ­தாலும் வாய்த் துர்­நாற்றம் ஏற்­பட கார­ண­மாக அமை­கின்­றது.

    நிறமாற்றம்
    விழுதல், அடி­ப­டுதல் போன்ற பாதிப்­புக்­களால் பல்லின் நரம்­புகள் பாதிக்­கப்­ப­டு­வதால் உட­ன­டி­யாக பல்லில் நிற­மாற்றம் ஏற்­ப­டாது. 3– 4 மாதங்­களில் பற்­களில் நிற­மாற்றம் ஏற்­ப­டும். இந்த நிற­மாற்­ற­மா­னது உட­ன­டி­யாக ஏற்­ப­டாது. கொஞ்சம் கொஞ்­ச­மாக மாற்றம் ஏற்­பட்டு பல் செத்துப் போய்­விடும்.

    உணவு உண்­ப­தாலும் நிறம் மாற வாய்ப்­புள்­ளது. கோப்பி, தேநீர் சொக்லேட் ஆகி­யவை சாதா­ர­ண­மாக நிற­மாற்­றத்­துக்கு ஏது­வாக அமை­கின்­றன. மருந்­து­களை எடுப்­ப­தாலும் பற்கள் நிற­மாற வாய்ப்­புள்­ளது. மற்­றது முதுமை ஒரு­ கா­ர­ண­மாக அமை­கி­றது. 
     
    பொது­வாக 30 வய­துக்கு மேல் பல கார­ணங்­களால் பல் பாதிப்பு அதி­க­ரிக்­கி­றது. சிறு வயது முதல் கல்­சியம், அயடின் மற்றும் பொஸ்­பரஸ் ஆகிய சத்துக் குறை­பாட்­டினால் பற்கள் விரைவில் வலு­வி­ழக்­கின்­றன. இவற்றை தடுக்க பழங்கள், காய்­க­றிகள் அதிகம் உண்ண வேண்டும். விற்­றமின் சத்து அதிகம் உள்ள தோடம்­பழம், எலு­மிச்சை, பப்­பாளி, திராட்சை இவற்றில் ஏதா­வது ஒன்றை தினமும் சாப்­பிட வேண்டும். மீன், கீரை வகைகள், தினமும் இரண்டு டம்ளர் பால் அவ­சியம். தண்ணீர் நிறைய குடிக்க வேண்டும். இனிப்பு, உப்பு, காரம் குறைத்து கொள்­ள­வேண்டும்.

    சூடா­கவும், கார­மாக, அதிக குளி­ரா­கவும் சாப்­பி­டு­வதை தவிர்க்­கவும். அப்­படி சாப்­பிட நேர்ந்தால் உப்புத் தண்­ணீரால் வாய் கொப்­ப­ளிக்­கவும். இனிப்பு சாப்­பிட்ட பின் கண்­டிப்­பாக துலக்­கவும்.  விபத்து போன்ற கார­ணங்­க­ளினால் பற்­களில் வெடிப்பு ஏற்­பட வாய்ப்­புள்­ளது. 
     
    எவ்­வ­ளவு விரைவில் வைத்­தி­ய­ரிடம் சென்று சிகிச்சை பெற முடி­யுமோ அந்­த­ள­வுக்கு பற்­களை காக்­க­மு­டியும். உதா­ர­ண­மாக ஒரு விபத்தில் பல் முழு­மை­யாக பாதிக்­கப்­பட்­டு­விட்டால் அந்தப் பல் இறப்­ப­தற்கு முன் பொருத்த வேண்டும். ஒரு சில மணித்­தி­யா­லங்­களின் பின் அந்தப் பல்லைக் காப்­பாற்ற முடி­யாமல் போகலாம்.
     
    ஞானப் பல்
    18–20 வயதி­ன­­ருக்­குத்தான் ஞானப் பல் முளைக்­கின்­றது. ஆனால் பல் முளைப்­ப­தற்­கான இட­வ­சதி இல்­லா­ததால் காய்ச்சல், வீக்கம் ஏற்­பட வாய்ப்­புள்­ளது. பல், முர­சு­களின் டிசுக்­களில் அதிக உண­வுகள் தேங்கி நிற்­பதால் பூச்சிப் பல் சொத்தை பல் வரக் கார­ண­மாக அமை­கி­றது.  ஒரு சில­ருக்கு ஞானப்பல் முளைக்க ஆரம்­பித்த உடன் அது வளர்­வ­தற்கு இட­மில்லை என்றால் வைத்­தி­யர்கள் அறிந்த பின்னர் அந்தப் பல்லை நீக்­கி­விடு­வார்கள்.

     பற்தூரிகை
    பற்­க­ளுக்கு தொடர்ந்தும் ஒரே பல் தூரி­கையை பயன்­படுத்­து­வதால் தூரிகை தேய்ந்து விடு­கின்­றது. இதனால் அதைப் பாவிப்­பதால் எந்­த­வி­த­மான பயனையும் பெற­மு­டி­யாது. இதனால் ஆறு மாதங்­க­ளுக்கு ஒரு முறை பற்­தூ­ரி­கை­களை மாற்­ற­வேண்டும். பற்­தூ­ரி­கைகள் பல­வி­த­மான ரகங்­களில் காணப்­ப­டு­கின்­றன. ஒவ்­வொரு­வரின் பற்­களின் தன்­மைக்கு ஏற்­ற­வாறு பற்­தூ­ரி­கை­களை தேர்ந்­தெ­டுக்க வேண்­டும். இதில் சொப்ட், மீடியம், ஆட் என பற்­தூ­ரி­கைகள் காணப்­ப­டு­கின்­றன.

    வைத்­தி­யரின் ஆலோ­சனைக்கு ஏற்­ற­வாறு பற்­தூ­ரி­கை­களை தேர்ந்­தெ­டுக்­கலாம். அதா­வது அதிகம் தேய்ந்த பற்­க­ளுக்கு மென்­மை­யான பற்­தூ­ரி­கை­களை பயன்­ப­டுத்­த­வேண்டும். பொது­வா­ன­வர்­க­ளுக்கு மீடியம் பற்­தூ­ரி­கையே சாலச் சிறந்­தது.

     வாய்புற்று நோய்
    ஒரு சிலர் வெற்­றிலை அதிகம் உண்­ப­தாலும், புகை­ப்­ப­த­னாலும் புற்று நோய் வர­வாய்ப்­புள்­ளது. பற்கள் சுத்­த­மில்­லாமல் வாய்ப்­புற்று நோய் வர மூலக் கார­ண­மாக அமை­யாது.
     
    சிறந்த முறையில் பல் துலக்­கு­வதை  கடை­பி­டிக்க வேண்டும்.  பற்­களில் ஏதா­வது துளைகள் ஏற்­பட்டால் அவற்றிற்கு சிகிச்சை பெற்றும்,மேலும் ஆறு­மா­தங்­க­ளுக்கு ஒரு முறை வைத்­தியரிடம் சென்றும் சிகிச்சை பெற­வேண்டும். இவ்வாறு  செய்தால் பற்களை நீண்ட காலத்திற்கு பராமரிக்க முடியும்.
     
    சிறு துண்டு பல் மிக நீண்ட கால­மாக முரசில் தங்­கி­யி­ருப்­பதால் பல் வீக்கம், தலை­வலி போன்றன ஏற்­பட வாய்ப்புள்­ளது.

    தெற்றுப் பல்
    தெற்றுப் பல் பரம்­பரை என்று சொல்­ல­லாம். எலும்பின் அமைப் பும் ஒரு காரண­மாக அமை­கின்­றது. இதற்கு வைத்­திய சிகிச்சை பெறு­வதன் மூலம் சரி­செய்து விட லாம். விபத்தின் காரண­மா­கவும் தெற்றுப் பல் ஏற்­பட வாய்ப்புகள் உண்டு. 

     பூச்சிப் பல் வராமல் தடுக்க
    இன்று நடை­மு­றையில் அதிக உண­வுகள் இனிப்­பு­வ­கை­களை சார்ந்­த­வை­யாகும். அவற்றை உண்­பதால் எமது பற்­களின் இடுக்­கு­களில் ஒரு மணி­நேரம் உண­வுகள் தங்­கி­யி­ருப்­பதால் தான் பூச்சிப் பல் வர கார­ண­மாக அமை­கி­றது. மேலும் பற்­களை காலையில் மாத்­திரம் துலக்­கி­விட்டு இரவு நேரத்தில் துலக்­கா­த­தாலும் பூச்­சிப்பல் வரலாம்.

    எனவே நாம் உணவு உண்ட உடனே பற்­களை துலக்­க­வேண்டும். ஆனால், இன்­றைய கால­கட்­டத்தில் அனை­வரும் தொழி­லுக்கு செல்­வதால் இதனைக் கடை­பி­டிக்க முடி­யாது. இருப்­பினும் ஒரு நாளைக்கு கண்­டிப்­பாக இரு முறை பல் துலக்­க­வேண்டும். காலை­யிலும்இ இரவு படுக்­கைக்குப் போக முன்பும் பல் துலக்­க­வேண்டும்.

     வைத்தியரின் தொடர்புகளுக்கு: 0114952352
    நன்றி: மெட்ரோ நியூஸ்
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: பற்களை கழற்றினால் 6 மாதத்துக்குள் செயற்கை பற்களை பொருத்திக் கொள்ள வேண்டும் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top