நீதி அழுது
பிச்சை கேட்கிறது.
ஏனென்றால்
இன்று அதை
ஏறெடுத்துப் பார்ப்பார்
அருகிவிட்டார்கள்.
பட்டினிச்சாவு
எங்கே தன்னை
பறித்துக்கொண்டு விடுமோ
என்று அச்சம் அதற்கு
நீதிக்கும் உயிர்மேல் ஆசை
வேறு எதற்காகவும் அல்ல
தான் மறைந்து விட்டால்
சுதந்திரமாக
உலாவர
ஆரம்பித்து விடுமே ! அதனால்தான்....
- வை.எல்.எஸ். ஹமீட் -
0 comments:
Post a Comment