பாக்தாத், செப்.7-
ஈராக்கிலுள்ள கிர்குக் நகரத்தை ஐ.எஸ் தீவிரவாதிகள் கைப்பற்றியுள்ளனர். அப்பகுதியை மீட்கும் நடவடிக்கைகளில் அந்நாட்டு அரசு
ஈடுபட்டுள்ளது.
அதன்படி நேற்று கிர்குக் நகரத்தில் உள்ள மருத்துவமனை ஒன்றின் மீது ஈராக் விமானப்படை வான் வழி தாக்குதல் நடத்தியது.
இதில் 7 பேர் கொல்லப்பட்டதுடன், குழந்தைகள் உள்பட 22 பேர் காயமடைந்ததாக நேரில் பார்த்த ஒருவர் தெரிவித்தார். கிர்குக் நகரில் உள்ள ஹவிஜா பகுதியில் பல இடங்களில் வான் வழி தாக்குதல் நடத்தியபோது மருத்துவமனையும் தாக்கப்பட்டதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார். இத்தாக்குதல் குறித்து அரசு தரப்பு எவ்வித விளக்கத்தையும் இது வரை தரவில்லை.
கடந்த ஜூன் மாதம் தங்கள் தாக்குதலை தொடங்கிய ஐ.எஸ். தீவிரவாதிகள் ஈராக்கின் மத்திய மற்றும் வடக்கு பகுதிகளை கைப்பற்றி
"இஸ்லாமிய நாடு" என்று தனி நாடாக அறிவித்து செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
இதில் 7 பேர் கொல்லப்பட்டதுடன், குழந்தைகள் உள்பட 22 பேர் காயமடைந்ததாக நேரில் பார்த்த ஒருவர் தெரிவித்தார். கிர்குக் நகரில் உள்ள ஹவிஜா பகுதியில் பல இடங்களில் வான் வழி தாக்குதல் நடத்தியபோது மருத்துவமனையும் தாக்கப்பட்டதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார். இத்தாக்குதல் குறித்து அரசு தரப்பு எவ்வித விளக்கத்தையும் இது வரை தரவில்லை.
0 comments:
Post a Comment