எம்.சஹாப்தீன்: நிந்தவூரில் இரு பாடசாலைகளில் மாணவர்களுக்கு சத்துணவு திட்டத்தின் வழங்கப்படுகின்ற பாலினை (பால் பக்கட்) மறு அறிவித்தல் வரை வழங்க வேண்டாமென்று நிந்தவூர் பொது சுகாதார அலுவலகம் இன்று; (09.09.2014) தடைவிதித்துள்ளது.
இது பற்றி பாடசாலைகளின் நிர்வாகம் நிந்தவூர் பொது சுகாதார காரியலாயத்திற்கு அறிவித்தன. இதனையடுத்து, பாடசாலைகளின் பொதுச் சுகாதாரத்திற்கு பொறுப்;பான பொது சுகாதார உத்தியோகத்தர் எஸ்.றஹீம் குறிப்பிட்ட பாடசாலைகளுக்கு வருகை தந்து, பால் பக்கட்டுக்களை பரிசீலனை செய்தார்.
இதனையடுத்து, குறிப்பிட்ட இரு பாடசாலைகளிலும் மறு அறிவித்தல் வரும்வரைக்கும் பால் பக்கட்டுக்களை வழங்க வேண்டாமென்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
0 comments:
Post a Comment