கடந்த ஆண்டு மீள்குடியேற்றப்பட்ட பொன்னாலை மேற்கு சுழிபுரத்தில் யு.எஸ் எய்ட் நிறுவனத்தின் நிதிப்பங்களிப்புடன் ஜசாக் நிறுவனத்தனால் நிர்மாணிக்கப்பட்டுள்ள 85 வீடுகள் 60 மலசலகூடங்கள் பொதுநோக்கு மண்டபம் என்பனவற்றை மக்கள் பாவனைக்காக கையளிக்கும் நிகழ்வு நேற்று முன்தினம் பொன்னாலையில் நடைபெற்றது.
இதன்போது சுமார் 2.3மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட பொது நோக்கு மண்டபமும் திறந்துவைக்கப்பட்டது.
இம் மண்டபத்தினை ஐக்கிய அமெரிக்காவின் இலங்கைக்கான துணைத்தூதுவர் அன்றூமேன்; வடக்குமாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரன் ஈ.பி.டி.பி பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்றக் குழுக்களின் பிரதித்தலைவருமான மு.சந்திரகுமார் ஆகியோர் திறந்துவைத்தனர்.இதன்போது சுமார் 2.3மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட பொது நோக்கு மண்டபமும் திறந்துவைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் சங்கானை பிரதேச செயலர் சோதிநாதன் சண்டிலிப்பாய் பிரதேச சபை உறுப்பினர் அன்ரன்ஜோன்சன் வலிமேற்கு பிரதேசசபையின் எதிர்கட்சித்தலைவர் பாலகிருஸ்ணன்(ஜீவன்) மற்றும் ஜசாக் நிறுவனத்தின் யாழ்.மாவட்ட இணைப்பாளர் மற்றும் அரச திணைக்களங்களின் அதிகாரிகள் பொதுஅமைப்புக்களின் பிரதிநிதிகள் எனப்பலர் கலந்து கொண்டனர்.
0 comments:
Post a Comment