பதுளை
மாவட்டத்தில் இணைந்து போட்டியிட்ட ஸ்ரீ லங்கா முஸ் லிம் காங்கிரஸ்
மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் பதுளை மாவட்டம்
முழுவதும் 5045 வாக்குகளையே இரட்டை இலை சின்னத்தால் பெற்றுள்ளன கடந்த ஊவா மாகாண சபைத் தேர்தலில் பதுளை
மாவட்டத்தில் தனித்து போட்டியிட்ட ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ்
கட்சியானது 4150 வாக்குகளைப் பெற்றிருந்தது. எனினும் கடந்த
முறையும் முஸ்லிம் காங்கிரஸ் ஊவாவில் ஆசனங்களை பெறவில்லை.
ஆனால் இம்முறை இரண்டு கட்சிகள் இணைந்து போட்டியிட்ட நிலையிலும் 5045 வாக்குகளையே பெற முடிந்துள்ளது.
தேர்தலின் பின்னர் ஆளும் கூட்டணியுடன்
இவர்கள் இணைந்துகொள்வார்கள் என்று தேர்தல் காலத்தில்
கூறப்பட்டுவந்தது.என்பதும் இதன் காரணமாக ஆளும் கூட்டணியின்
சார்பில் பதுளை மாவட்டத்தில் முஸ்லிம் வேட்பாளர்கள் களமிறப்படவில்லை எனவும்
தெரிவிக்கப்பட்டு வந்தமை சுட்டிக்காட்டத்தக்கது