பயங்கரவாதம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதன்
பின்னர் நிர்வாக பயங்கரவாதம் தலைதூக்கியுள்ளதோ என்ற அச்சம் சிறுபான்மையின
மக்களிடையே தோன்றியுள்ளதாக சிறீலங்கா முஸ்லீம் காங்ரஸின் தலைவரும் நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
கிண்ணியாவில் நேற்று (03.08.14) நடைபெற்ற
வைத்திய நிபுணர்களுக்கான விடுதிக் கட்டத்துக்கு அடிக்கல் நாட்டும்
நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட அவர்
சிறுபான்மையின மக்கள் செறிந்து வாழும் பகுதிகளில் நான் கலந்துகொள்ளும்
ஒவ்வொரு நிகழ்விலும் தமிழில் தேசிய கீதத்தை பாடும் நிகழ்ச்சிகளையே ஏற்பாடு
செய்வேன்.
இந்தத் திணிப்புக் கெதிராக பேசுவதற்கும்
அதற்கு கெதிராக துணிவோடு நடப்பதற்கும் எங்களால் முடியவில்லை என்றால்
நாங்கள் இந்த ஆட்சியில் பங்காளியாக இருப்பதில் அர்த்தமில்லை. எந்த
மொழிகளுக்கும் சம அந்தஸ்து கொண்டுவரப்பட்ட பின் அந்த இரண்டு மொழிகளிலும்
தேசிய கீதத்தை பாடுவதில் என்ன தவறு இருக்கின்றது.
ஆணைக்குழுவை அமைத்து அதைச் செய்வோம் இதைச்
செய்வோம் என்று சர்வதேசத்துக்கு பறை சாற்றுவதில் எந்த அர்த்தமுமில்லை.
எனவேதான் இந்த நாட்டில் நீதி அமைச்சராக இருந்து கொண்டும் அரசாங்கத்தில்
அங்கமாக இருந்து கொண்டும் இந்த விடயத்தில் கொஞ்சம் பிடிவாதப் போக்கை நான்
கடைப்பிடிக்கிறேன்.
அரசியல் அமைப்பில் இருக்கின்ற விடயத்தை
அனுபவிப்பதற்கு எங்களுக்கும் உரிமை இருக்கின்றது. அரசியல் அமைப்பில்
இருக்கின்ற ஆயிரம் விடயங்களை இருப்பதே தெரியாமல் கிடப்பில்
போடுகின்றார்கள்.
எங்கெல்லம் போகப் பயப்பட்டார்களோ அந்த
இடங்கள் எல்லாம் இன்று தொல்பொருள் ஆராய்ச்சி நடைபெறுகின்றது. இந்த
நாட்டிலே தொல்பொருட்கள் எல்லாம் பாதுகாக்கப்படவேண்டும். தாராளமாக
பாதுகாருங்கள். ஆனால்இ தொல்பொருள் ஆராய்ச்சி என்ற பெயரில் எல்லா
விடயங்களிலும் முட்டுக் கட்டை போட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.
இன்று நில அளவையாளர்களுக்கு தொல்பொருள் ஆராய்ச்சிக்கு காணி ஒதுக்கின்ற வேலைகளும் வழங்கப்பட்டிருக்கின்றன.
ஆனால்இ இவை சட்டம்இ நீதிஇ நியாய
ஒழுங்குகளுக்கு கட்டுப்பட வேண்டும். யுத்த காலத்தில் இல்லாத வனப்
பரிபாலனங்கள் அதிகாரிகளுடைய அட்டகாசம் இப்பொழுது தலைவிரித்து ஆடுகின்ற
கோலத்தில் எல்லோரும் இருக்கின்றார்கள்.
அன்றாட ஜீவனனோபாயம். அதிலே படுகின்ற கஷ்டம்
என்பன அரசாங்கத்தின் வருமானத்தை கருதி இன்று வருமானத்துக்;கு வாழ்வதாரமே
பாதிக்கின்ற அளவுக்கு நடக்கின்றது.
இப்போது இடங்களிலே சட்டம்
அமுலாக்கபடுவதில்லை. அசமந்தப் போக்கும் தாமதமுமே காணப்படுகின்றது. மக்களின்
வாழ்வதார விடயத்தில் கடுமையான போக்கு மிகப் பெரிய நெருக்கடி இன்று
காணப்படுகின்றது.
நிர்வாக ரீதியாக ஒரு விதப் பயங்கரவாதம்
இன்று காணப்படுகின்றது. இந்த நாட்டிலே ஆயுதப்பயங்கரவாதம் தொடங்கியுள்ளது.
இதற்கு அன்றாடம் மக்கள் முகங் கொடுத்து வருகின்றனர் என ஹக்கீம்
தெரிவித்துள்ளார்.-TC
0 comments:
Post a Comment