இரா.சம்பந்தன் தலைமையில் இடம்பெறவுள்ள சந்திப்பில் வடக்கு கிழக்கு
மாகாணத்தின் தற்போதைய நிலைமை மற்றும் வடமாகாண சபை செயற்படுவதற்கு அரசாங்கம்
தடையாவுள்ளமை போன்ற பல்வேறு விடயங்கள் தொடர்பில் பேச்சுவார்த்i
நடத்தப்படவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
அதேவேளை வடக்கு கிழக்கு மாகாணத்தின் அபிவிருத்திக்கு ஜப்பான் நேரடியாக
உதவியளிக்க வேண்டும் என கோரி மகஜர் ஒன்று கையளிக்கவுள்ளதாக கூட்டமைப்பு
தெரிவித்துள்ளது.
2002ஆம் ஆண்டு நேர்வேயின் ஏற்பாட்டில் அரசாங்கத்துக்கும் புலிகளுக்கும்
இடையே பேச்சுக்கள் ஆரம்பிக்கப்பட்டபோது அன்றில் இருந்து யசூசி அகாசி
ஜப்பான் நாட்டின் இலங்கைக்கான சமாதான தூதுவராக நியமிக்கப்பட்டிருந்தார்.
இது இவரது இலங்கைக்கான 24 ஆவது பயணம் என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment