• Latest News

    September 06, 2014

    தமிழரசுக் கட்சியின் புதிய நிர்வாக உறுப்பினர்கள் இன்று தெரிவு

    இலங்கைத் தமிழரசுக் கட்சியின் 15வது தேசிய மாநாட்டின் இரண்டாம் நாள் நிகழ்வுகள் இன்று வவுனியா நகரசபை கலாசார மண்டபத்தில் ஆரம்பமாகியது.

    கட்சியின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் காலை 9.30க்கு ஆரம்பமான நிகழ்வுகளில் 160 பொதுச்சபை உறுப்பினர்கள் பங்கேற்றுள்ளனர்.

    இதன்போது தமிழரசுக் கட்சியின் தலைவர், செயலாளர், பொருளாளர் உட்பட கட்சியின் புதிய நிர்வாக உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படுவர்.

    இதனையடுத்து நாளை இடமபெறவுள்ள கட்சியின் மாநாட்டில் வெளியிடப்படும் தீர்மானங்கள் தொடர்பாகவும் கலந்துரையாடப்படவுள்ளது.

    இன்றைய நிகழ்வுகளில் தமிழ்த் தேசியத்தின் பதிவுகள் என்ற தலைப்பிலான புகைப்பட கண்காட்சியும் இடம்பெற்றிருந்ததுடன் மாலை 02.00 மணிக்கு தமிழரசுக் கட்சியின் இளைஞர் அணி மாநாடும் இடம்பெறவுள்ளது.
     





    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: தமிழரசுக் கட்சியின் புதிய நிர்வாக உறுப்பினர்கள் இன்று தெரிவு Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top