
ஐக்கிய
நாடுகள் மனித உரிமைப் பேரவையின் விசாரணைகளை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என
இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின்
விசாரணைகளினால் எவ்வித மாற்றமும்
ஏற்படப் போவதில்லை என ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவைக்கான இலங்கைப் பிரதிநிதி ரவிநாத் ஆரியசிங்க தெரிவித்துள்ளார்.
சர்வதேச சமூகத்துடன் தொடர்ந்தும் இணைந்து
செயற்பட விரும்புவதாகக் குறிப்பிட்டுள்ளார். எனினும் ஐக்கிய நாடுகள் மனித
உரிமைப் பேரவையின் சர்வதேச விசாரணைகளை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை எனவும்,
அதனை நிராகரிப்பதாகவும் திட்டவட்டமாக அறிவித்துள்ளது.சர்வதேச சமூகத்துடன்
தொடர்ந்தும் இணைந்து செயற்பட விரும்புவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின்
27ம் அமர்வுகள் இன்றைய தினம் ஜெனீவாவில் ஆரம்பமானது. இந்த அமர்வுகளில்
பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்தள்ளார். ஐக்கிய நாடுகள்
மனித உரிமைப் பேரவையில் கடந்த மார்ச் மாதம் நிறைவேற்றப்பட்ட
தீர்மானத்தையும் நிராகரிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அரசாங்கம்
தொடர்ச்சியாக உள்ளக விசாரணைப் பொறிமுறைமை ஒன்றை அமுல்படுத்தும் என அவர்
குறிப்பிட்டுள்ளார்.