• Latest News

    September 09, 2014

    சிங்கள பௌத்த வாக்குகளின் ஒரு பகுதியை பிரித்தெடுத்தால் வெற்றி நமக்கே: சஜித் பிரேமதாஸ

    எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் சிங்கள பௌத்த வாக்குகளை அடிப்படையாக கொண்டு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரது தேர்தல் பிரச்சாரம் முன்னெடுக்கப்படும் என அக்கட்சியின் பிரதித் தலைவராக நியமிக்கப்பட உள்ள நாடாளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

    போருக்கு எதிரான செயற்பட்ட அரச சார்பற்ற நிறுவனங்கள் எதுவும் அந்த தேர்தல் பிரசாரத்தில் இணைத்து கொள்ளப்பட போவதில்லை என்றும் அவர் கூறியுள்ளார். பசறையில் நடைபெற்ற கலந்துரையாடல் ஒன்றின் போது சஜித் பிரேமதாச இதனை கூறியதாக தெரிவிக்கப்படுகிறது.

    அவர் மேலும் தெரிவிக்கையில், பொது வேட்பாளர்கள் எமது தேவையில்லை. எமது தலைவரை நாங்கள் வேட்பாளராக நிறுத்த போகிறோம். எமது கொள்கைகளை ஏற்றுக்கொண்ட எவரும் எம்முடன் இணைய முடியும். ஆனால், நிபந்தனைகளை விதிக்க முடியாது. தேவையற்ற பொது சின்னங்கள் தேவையில்லை.

    கட்சியின் தலைவர் யானைச் சின்னத்தில் தேர்தலில் போட்டியிட வேண்டும். அரச சார்பற்ற அமைப்பை சேர்ந்தவர்களை இணைத்து கொண்டு முன்னணியை ஏற்படுத்த தேவையில்லை. சிங்கள பௌத்த வாக்குகளின் ஒரு பகுதியை பிரித்தெடுத்தால் போதுமானது. தமிழ், முஸ்லிம் மக்களின் வாக்குகள்  ஐக்கிய தேசியக் கட்சிக்கே கிடைக்கும்.

    அப்படியிருக்கும் போது முன்னணிகள் எதற்கு?. அரச சார்பற்ற நிறுவனங்களை சேர்ந்தவர்களுக்கு உதவி செய்யும் நபர்களை கட்சியில் இருந்து துரத்த வேண்டும் எனவும் சஜித் பிரேமதாச குறிப்பிட்டுள்ளார்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: சிங்கள பௌத்த வாக்குகளின் ஒரு பகுதியை பிரித்தெடுத்தால் வெற்றி நமக்கே: சஜித் பிரேமதாஸ Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top