• Latest News

    September 19, 2014

    இந்திய முஸ்லீம்கள் குறித்த மோடியின் கருத்துக்கு இஸ்லாமிய தலைவர்கள் பாராட்டு!

    புதுடெல்லி: இந்திய முஸ்லீம்கள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி கூறிய கருத்துக்கு இஸ்லாமிய தலைவர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

    வெளிநாட்டு ஆங்கில செய்தி சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்த மோடி  'இந்திய முஸ்லீம்களின் தேசப்பற்று குறித்து யாரும் கேள்வி எழுப்ப முடியாது. அவர்கள் இந்தியாவுக்காகவே வாழ்ந்து, இந்தியாவுக்காகவே உயிர் துறப்பார்கள். இந்திய முஸ்லீம்கள் தங்களது தாளத்திற்கு ஏற்ப ஆடுவார்கள் என அல் காய்தா இயக்கம் தவறான எண்ணத்தை கொண்டுள்ளது' எனக் கூறியிருந்தார்.

    இந்நிலையில் மோடியின் இந்த கருத்துக்கு இஸ்லாமிய தலைவர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
    'பிரதமர் மோடியின் இந்த கருத்தை நாங்கள் வரவேற்கிறோம். எங்களை ஜிகாத் விரும்பிகள் என்று குற்றம் சாட்டுபவர்களுக்கும், பிளவை ஏற்படுத்த முயற்சிப்பவர்களுக்கும் பிரதமரின் இந்த கருத்து சரியான பதிலாக இருக்கும்' என்று இஸ்லாமிய மதகுரு முப்தி முக்காராம் கூறியுள்ளார்.

    மத்திய சிறுபான்மைத் துறை அமைச்சர் நஜ்மா ஹெப்துல்லா, பிரதமரின் பேட்டியை பார்த்து தாம் மிகவும் சிலிர்த்துப்போனதாக கூறியுள்ளார். ' கடந்த காலங்களிலும் கூட அவர் (மோடி) இதனை குறிப்பிட்டுள்ளார். தற்போது அவர் இதனை வெளிப்படையாக பேசியுள்ளார். மோடியின் இந்த கருத்து இஸ்லாமிய இளைஞர்கள் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத இயக்கத்தின் பக்கம் சாய்வதையும், அல் காய்தாவின் வலையில் வீழ்வதையும் தடுக்கும். எதிர்க்கட்சியினரும் மோடியை விமர்சிப்பவர்களும் இன்னமும் மோடியை இஸ்லாமியர்களுக்கு எதிரானவராக சித்தரித்தால் அது நகைப்புக்குரியதாகத்தான் இருக்கும்' என மேலும் கூறியுள்ளார்.

    இதனிடையே பா.ஜனதா தலைவர் ஷா நவாஸ் உசேன் ' சிறுபான்மையினர் மீதான பா.ஜனதாவின் எண்ணத்தையே மோடி வெளிப்படுத்தியுள்ளார். மோடியின் இந்த கருத்து முற்றிலும் சிறப்பாக உள்ளது. இந்திய முஸ்லீம்கள் எப்பொழுதுமே தேசத்திற்காக வாழ்ந்து உயிர் துறப்பவர்கள். கார்கில் போரில் கூட அதனை நாம் கண்டோம்' எனக் கூறியுள்ளார்.

    காங்கிரஸ் காட்டம்

    இதனிடையே மோடியின் மேற்கூறிய கருத்து குறித்து விமர்சித்துள்ள காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சந்தீப் தீட்சித் ' இந்திய முஸ்லீம்களுக்கு யாரிடமிருந்தும் நற்சான்றிதழ் தேவையில்லை. அமெரிக்கா விசா பெறுவதில் மிகவும் ஆர்வமாக இருந்த மோடி  தற்போது அமெரிக்கா செல்ல இருப்பதால் இவ்வாறு கூறியுள்ளார். ஏனெனில் அமெரிக்காவிலும் கணிசமான இஸ்லாமியர்கள் உள்ளனர் ' என்று தெரிவித்துள்ளார்.

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: இந்திய முஸ்லீம்கள் குறித்த மோடியின் கருத்துக்கு இஸ்லாமிய தலைவர்கள் பாராட்டு! Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top