• Latest News

    September 09, 2014

    ஜிம்கானா விளையாட்டுக்கழகம் வெற்றி

    எஸ்.அஷ்ரப்கான்: கல்முனை யங் பேட்ஸ் விளையாட்டுக்கழகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்று வந்த ' யங் பேட்ஸ் கிண்ணம்-2014 ' கிரிக்கெட் சுற்றுப்போட்டிகளின்  இறுதிப்போட்டியில் கல்முனை ஜிம்கானா விளையாட்டுக்கழகம் வெற்றிபெற்று சம்பியனாக தெரிவானது.

     இவ்விறுதிப்போட்டி நேற்று (06) சனிக்கிழமை கல்முனை சந்தாங்கேணி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. சாய்ந்தமருது பிளைங் ஹோர்ஸ் விளையாட்டுக்கழகத்தை எதிர்த்து கல்முனை  ஜிம்கானா விளையாட்டுக்கழகம் மோதிய இந்த இறுதிப்போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றியீட்டிய ஜிம்கானா விளையாட்டுக்கழகம் களத்தடுப்பை ஏற்றுக்கொண்ட நிலையில் முதலில் துடுப்பெடுத்தாடிய சாய்ந்தமருது பிளைங் ஹோர்ஸ் விளையாட்டுக்கழகம் 20 ஓவர்களில் 113 ஓட்டங்களை பெற்றது.
     
    இலகுவான வெற்றி இலக்கை எதிர்கொள்ள பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஜிம்கானா விளையாட்டுக்கழகம் போட்டியின் நடுப்பகுதியில் எதிரணியின் பந்துவீச்சுக்களுக்கு முகம்கொடுக்க முடியாத நிலையில் சற்று தடுமாறி தொடராக விக்கெட்டுக்களை இழந்து வந்தாலும், போட்டியின் இறுதி நேரம் வரை மிக விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில் இறுதி ஓவரின் 2 பந்துகளுக்கு 2 ஓட்டங்கள் என்ற இலக்கில் போட்டி முடிவின்போது கல்முனை ஜிம்கானா வி.கழக அணியினர் வெற்றி இலக்கை அடைந்தனர்.

     இந்த இறுதிப்போட்டிக்கு பிரதம அதிதியாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் அம்பாரை மாவட்ட மக்கள் பிரதிநிதிகளின் செயலாளரும், கல்முனை மாநகர சபை உறுப்பினருமான ஏ.எம். பறக்கத்துள்ளாஹ் கலந்து கொண்டு வெற்றி பெற்ற அணியினருக்கான வெற்றிக்கேடயம், பணப்பரிசு என்பவற்றை வழங்கிவைத்தார். இச்சுற்றுப்போட்டியில் 2ஆம் நிலைக்கு வந்த சாய்ந்தமருது பிளைங் ஹோர்ஸ் விளையாட்டுக்கழகத்தினருக்கான கேடயம் மேலும் சிறப்பு, தொடர் ஆட்டக்காரர்களுக்கான பரிசில்களும் கிண்ணமும் அதிதிகளால் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

    இவ்விளையாட்டு நிகழ்வில் கௌரவ அதிதியாக முன்னாள் கல்விக் கல்லூரி விரிவுரையாளர் எம்.ஐ.எம். முஸ்தபா அவர்களும், விசேட அதிதிகளாக கல்முனை ஜிம்கானா விளையாட்டுக்கழகத்தின் தலைவர் ஆசிரியர் ஸலாம்,செயலாளர் எஸ்.எல்.எம். ஜாபீர், கல்முனை யங் பேட்ஸ் விளையாட்டுக்கழகத்தின் பிரதித் தலைவர் எம்.எம். மர்சூக், ஆயுட்காலச் செயலாளர் எம்.ஐ.எம். பாயிஸ் மற்றும் கவிஜரும், அறிவிப்பாளருமான எம். ஸாஹீர் கரீம், வீதி அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.ஐ.எம். சுபைர் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.









    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: ஜிம்கானா விளையாட்டுக்கழகம் வெற்றி Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top