• Latest News

    September 16, 2014

    நெல் விலை அதிகரிப்பை கட்டுப் படுத்த கூக் குரல் இடுவது நியாயமா??

    துறையூர் ஏ.கே மிஸ்பா{ஹல் ஹக்:
    அம்பாறை மாவட்டத்தில் என்றும் இல்லாதது போன்று நெல் விலையானது  யானை குதிரை விலை போய்க் கொண்டிருக்கிறது.இதனை கட்டுப் படுத்த அ.இ.அ.பொ.ஊ  ஜனாதிபதிக்கு மகஜர் அனுப்பி வைத்துள்ளதாம்.நெல் விலையின் இவ் அதிகரிப்பிற்கு இம் முறை நீர்ப் பற்றாக் குறையால் பல ஏக்கர் காணிகளில் விவசாயம் செய்ய செய்யத் தடை விதிக்கப் படமையே பிரதான காரணம் எனலாம்.நெல் விலை அதிகரிப்பை மக்களுக்கு சுமையாக பார்க்கிறீர்களே!யாராவது அந்த விவசாயிகளை சற்றேனும் சிந்தித்து பார்த்தீர்களா??
    விவசாயத்தையே வாழ் வாதாரமாக கொண்டு வாழும் இம் மக்களிடம்,நீர் இல்லை நீங்கள் விவசாயம் செய்ய வேண்டாம் என்றால்,தங்கள் வாழ்கையை இவர்களால் எங்கனம் கொண்டு இயலும்..??இவர்களிற்காக யார் குரல் கொடுக்குகிறார்கள் ..??அரசாங்கத்தால் இவர்களிற்கு வழங்கப் படும் தீர்வுதான் என்ன??

    மிஞ்சி மிஞ்சி போனால் விதை நெல்லை வழங்குவார்கள்.இதன் பிரதிபலனை நான்கு மாதங்களின் பின்பே அவர்களால் பெற்றுக் கொள்ள இயலும்.அவர்களிற்கான உடனடித் தீர்வு பற்றி யாருமே சிந்திப்பதில்லை.
    உண்மையில்  அரிசியின் விலை அதிகரிப்பை சற்று சகித்துக் கொண்டு எம் சமூகம் செல்லுமாக இருந்தால் அது பாதிக்கப்பட்டுள்ள அவ் விவசாயிகளுக்கு மிகப் பெரிய உதவியாக அமையும்.

    நாங்கள் ஏன் சகிக்க  வேண்டும் என கேட்கலாம்..??உதாரணமாக,சம்பள உயர்விற்காக அரசாங்க ஊழியர்கள் போர்க் கொடி தூக்கினால்.அரசாங்கம் அவர்களினது சம்பள அதிகரிப்பிற்கு பொருட்கள் மீதான வரியை கூட்டி,அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தை சம்பள அதிகரிப்பிற்கு பயன்படுத்தும்.இது நாட்டில் உள்ள அனைவரையும் பாதிக்கும்.அரசாங்க ஊழியர்களினது சம்பள அதிகரிப்பிற்கு  நாட்டில் உள்ள ஒவ்வொருவரும் பங்கெடுப்பார்கள் என்றால் ஏன் விவசாயிகளிற்காய் இவ் விடயத்தில் நாட்டு மக்களால் இம் முறை பங்கெடுக்க முடியாது..??

    மேலும்,அரிசியின் விலையை பொறுத்த மட்டில் நாட்டில் நிர்ணயிக்கப் பட்ட விலையிலேயே விற்க முடியும்.இவ் அதிகரிப்பினால் சாதாரண பொது மக்கள் பாதிக்கப் பட்டதை விட அரிசி ஆலை பணக்கார வர்க்க முதலாளிமார்களே அதிகம்  பாதிப்புக்குள்ளாக்கியுள்ளது.வசதி படைத்தோர் பாதிக்கப் பட்டால் குரல் கொடுக்க பலரும் விளைவது சாதாரணமானது தான்.

    இன்னுமொரு விடயத்தையும் நாம் பார்க்க வேண்டும்.அரிசியிற்கு நிர்ணயிக்கப் பட்ட விலை இருப்பது போல் நெல்லிற்கும் நிர்ணயிக்கப் பட்ட விலை உள்ளது.ஆனால் அது அரசாங்க நெல் கொள்வனவு செய்யும் இடங்களில் மாத்திரமே.இது என்ன நியாயம்??நெல்லிற்கு அரசாங்க இடத்தில் மாத்திரம் குறிக்கப் விலை,ஆனால் அறிசியிற்கோ எங்கும் குறிக்கப்பட்ட விலை.

    அரசாங்க நெல் கொள்வனவு செய்யும் இடங்களில் விவசாயிகள் நெல் விற்பனையின் போது அனுபவிற்கும் இடர்பாடுகளும்,மிகைத்த செலவு தானங்களை  வைத்துப் பார்த்து குறைந்த விலையில் தனியார்களிற்கே விற்று விடுவார்கள்.மேலும்,ஒரு விவிசாயி குறித்தளவு நெல்களை மாத்திரமே அங்கே விற்க முடியும்.அவர்களது ஏனைய நெல்களை அரசு என்ன செய்யச் சொல்லுகிறது??

    விவசாயிகள் நெல்லை அரசாங்க நிர்ணயிக்கப்பட்ட விலையை விட குறைந்த விலையிலே அதிகம் விற்பனை செய்வார்கள்.இதனை நாம் சாதாரணமாகவே எமது ஊர்களில் பார்வையிடலாம்.இதை கேட்க ஆளில்லை.இதன் போது அதிக இலாபத்தை சற்றேனும் மனச் சாட்சி இன்றி அரிசி ஆலை முதலாளிமார்கள் அடைந்து கொள்வார்கள்.

    இம் முறை விலை அதிகரித்தால் கூக் குரல் இடுவது நியாயமா??
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: நெல் விலை அதிகரிப்பை கட்டுப் படுத்த கூக் குரல் இடுவது நியாயமா?? Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top