எஸ்.றிபான் -
ஊவா மாகாண சபைத் தேர்தலில் கூட்டுச் சேர்ந்துள்ள மு.காவும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸும், ஊவா மாகாணத்தில் சுமார் 40 ஆயிரத்திற்கும் குறைவான வாக்குகளை இலங்கை முஸ்லிம்களின் விடிவுக்கான வாக்குகளாக காண்பித்துக் கொண்டிருக்கின்றார்கள். இக்கூட்டுக்கு ஊவா மாகாண முஸ்லிம்கள் வாக்களிக்காது போனால், இலங்கை முஸ்லிம்களுக்கு செய்த அநீயாயமாகிவிடுமேன்றும் தெரிவித்துக் கொண்டிருக்கின்றார்கள்.
ஊவா மாகாண சபைத் தேர்தலில் கூட்டுச் சேர்ந்துள்ள மு.காவும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸும், ஊவா மாகாணத்தில் சுமார் 40 ஆயிரத்திற்கும் குறைவான வாக்குகளை இலங்கை முஸ்லிம்களின் விடிவுக்கான வாக்குகளாக காண்பித்துக் கொண்டிருக்கின்றார்கள். இக்கூட்டுக்கு ஊவா மாகாண முஸ்லிம்கள் வாக்களிக்காது போனால், இலங்கை முஸ்லிம்களுக்கு செய்த அநீயாயமாகிவிடுமேன்றும் தெரிவித்துக் கொண்டிருக்கின்றார்கள்.
இலங்கை முஸ்லிம்களின் இன்றைய இருப்புக்கும், அவலத்திற்கும் காரணமானவர்கள் முஸ்லிம் அரசியல்வாதிகளாவார்கள். தங்களின் தனிப்பட்ட சுகபோகங்களுக்காக முஸ்லிம்களின் வாக்குகளைப் பெற்று, சமூகத்தின் அனைத்து உரிமைகளையும் பேரினவாதிகளின் திட்டங்களுக்கு தாரைவார்த்துக் கொடுத்தவர்கள் முஸ்லிம் அரசியல்வாதிகளாவார்கள். இதில்; இன்றைய பாராளுமன்றத்தில் உள்ள முஸ்லிம் மக்கள் பிரதிநிதிகளுக்கும் பங்குகள்
இருக்கின்றன. இந்த பெருமையைக் கொண்ட இவர்கள், காலத்திற்கு காலம் தேர்தல்களில் மேடைகளில் ஏறி, உரிமைகள், விடுதலை எனப் பலவாறாகப் பேசினார்கள். வாக்குகளைப் பெற்றதன் பின்னர், தலைமறைவாகிப் போனவர்கள்தான் இன்றைய முஸ்லிம் அரசியல் தலைவர்கள்.இவர்கள் அரசாங்கத்திற்கு தங்களின் விசுவாசத்தைக் காட்டுவதற்காக கூட்டிணைந்து, முஸ்லிம்களின் ஒற்றுமைக்கு வாக்களியுங்கள் என மக்களிடம் கேட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.
முஸ்லிம்கள் எதிர் கொண்டு வருகின்ற சிக்கல்களுக்கு தீர்வுகளை பெற்றுக் கொடுக்க முடியாத பயில்வான்களாக இருந்து கொண்டிருக்கும் அமைச்சர்கள் றிசாட் பதியுதின், ரவூப் ஹக்கிம் போன்றவர்கள் ஒரே மேடையில் தோன்றி, உரிமைக் கதைகளைச் சொல்லிக் கொண்டிருக்கின்றார்கள். அரசாங்கத்தை திட்டிக் கொள்ளும் அதே வேளை, அரசாங்கத்தில் தாங்கள் ஒட்டிக் கொண்டிருப்பதற்கான காரணங்களையும் சொல்லிக் கொண்டிருக்கின்றார்கள்.
பதுளையில் ரவூப் ஹக்கிமும், றிசாட் பதியுதீன் ஒரே மேடையில் தோன்றி, தங்களின் ஒற்றுமையின் இறுக்கத்தை காட்டியுள்ளார்கள். தங்களின் ஒற்றுமை தேசிய மட்டத்தில் 25 மாவட்டங்களிலும் ஏற்படுவதற்கு ஊவா மாகாண முஸ்லிம்கள் வாக்களிக்க வேண்டுமென்று வேண்டுகின்றார்கள். ஊவா மாகாண முஸ்லிம்கள் தங்களின் கூட்டுக்கு வாக்களிக்காது போனால், தேசிய ரீதியில் தங்களினால் ஒற்றுமைப்பட முடியாதென்று தங்களின் இயலாமையையும் சொல்லிக் கொண்டிருக்கின்றார்கள்.
அமைச்சர் றிசாட் பதியுதீன் மற்றும் ரவூப் ஹக்கிம் கலந்து கொண்ட பிரச்சாரக் கூட்டமொன்றில் உரையாற்றிய றிசாட் பதியுதீன், பொது பல சேனாவையும் ஞானசாரரையும் அடக்கி ஒடுக்காததன் விளைவுதான் இந்த பதுளை மாவட்ட முஸ்லிம்களின் ஒற்றுமை என்பதை அரசுக்கு உணர்த்துவதென்றால் இத்தேர்தலில் பதுளை முஸ்லிம்கள் ஒன்றுபட்டு முஸ்லிம் கூட்டமைப்புக்கு வாக்களிக்க வேண்டும். 20 இலட்சம் முஸ்லிம்களை ஒன்றுபடுத்தும் பொறுப்பு இன்று பதுளை மாவட்ட முஸ்லிம்களின் கைகளில் வந்துள்ளது. இதற்கு மாற்றமாக பதுளை மாவட்ட முஸ்லிம்கள் செயற்படுவார்களாயின் அது இந்த நாட்டு முஸ்லிம்களின் பாதுகாப்பு, உரிமை, கௌரவம் என்பனவற்றை நாசம் செய்த பாவம் இந்த பதுளை மாவட்ட முஸ்லிம்களையே வந்து சேரும். எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலின் போது யார் ஜனாதிபதி என்பதை இங்குள்ள 20 இலட்சம் முஸ்லிம்களின் வாக்குகள் தான் தீர்மானிக்கும் சக்தியாக மாற பதுளை மாவட்ட முஸ்லிம்களின் ஒற்றுமை பெற்றுத் தரவேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
பொது பல சேனவின் முஸ்லிம் விரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்துவதற்கு முடியாத நிலையில் கைகளை கட்டிக் கொண்டு நின்ற இவர்கள், பொது பல சேனாவையும் ஞானசாரரையும் அடக்கி ஒடுக்காததன் விளைவுதான் முஸ்லிம்களின் ஒற்றுமைக்கு காரணமென்று காட்டுவதற்கு வாக்களிக்குமாறு கேட்பது, முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைப்பதற்கு எடுத்துக் கொள்ளும் மற்றுமொரு முயற்சியாகும்.
முஸ்லிம் சமூகத்தின் நன்மையைக் கருத்திற் கொண்டு இக்கட்சிகள் இணைந்துள்ளனவா என்றால், அதுவமில்லை. ஊவா மாகாணத்தில் உள்ள முஸ்லிம்களில் ஒரு குழுவினர் எடுத்துக் கொண்ட முயற்சியின் காரணமாக, மாற்று வழி இல்லாததன் காரணமாகவும், அரசாங்கத்திற்கு நன்மையளிக்க இருப்பதனாலுமே இந்தக் கூட்டு ஏற்பட்டுள்ளது. இக்கட்சிகள் ஒற்றுமை என்று காட்டிக் கொண்டிருக்கும் அதே வேளை, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் முஸ்லிம் வேட்பாளர்கள் நிறுத்தப்படாமைக்கான காரணம், தங்களின் வேட்பாளர்கள் இரண்டு முஸ்லிம் கட்சிகளின் கூட்டில் இணைந்து கேட்பதாகும் என அமைச்சர் நிமல் சிறிபால தெரிவித்துள்ளார்கள். அதாவது, இரட்டை இலையில் போட்டியிடும் முஸ்லிம் வேட்பாளர்கள் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ளவர்கள். அரசாங்கத்திற்கு விசுவாசமானவர்கள் என்று மறைமுகமாகத் தெரிவித்துள்ளார்.
முஸ்லிம் கட்சிகளின் கூட்டுக்கு வாக்களிக்காது பதுளை மாவட்ட முஸ்லிம்கள் செயற்படுவார்களாயின் அது இந்த நாட்டு முஸ்லிம்களின் பாதுகாப்பு, உரிமை, கௌரவம் என்பனவற்றை நாசம் செய்த பாவமாக இருக்குமென்று அமைச்சர் றிசாட் தெரிவித்திருப்பது நல்ல பகடியாகவும் இருக்கின்றது.
ஊவா மாகாண சபைத் தேர்தலில் முஸ்லிம் கட்சிகளின் கூட்டுக்கு வாக்களிக்காது போனால், அது பாவமான செயல் என்றால், முஸ்லிம்களின் உரிமைகளை பாதுகாக்க வாக்களியுங்கள் என தெரிவித்து வாக்குகளைப் பெற்றுக் கொண்ட, மு.காவும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மற்றும் ஏனைய முஸ்லிம் கட்சிகளும,; தலைவர்களும் தமது வாக்குறுதிக்கு மாற்றமாக நடந்து கொண்டது பாவமில்லையா? இந்த பாவத்திற்கு முஸ்லிம் மக்களிடம் மன்னிப்பு கேட்;காமலும், பாவத்திற்கு பரிகாரம் காணாமலும் இருக்கின்ற முஸ்லிம் தலைவர்கள், ஊவா மாகாண முஸ்லிம்களை பாவிகளாக காண்பிப்பதற்கு களம் ஆடுகின்றார்கள்.
முஸ்லிம்களின் குரலாக செயற்பட்ட (பழைய) ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை கூறுபோட்டு, அதற்கான கைக்கூலியையும் பெற்றுக் கொண்டதனைச் செய்தவர்கள் யார்?
கிழக்கு மாகாண சபைக்கான முதலாவது தேர்தலில் முஸ்லிம் முதலமைச்சர் ஒருவரை பெற்றுக் கொள்வதற்கு ஒற்றுமைப்படாது முஸ்லிம்களின் அரசியல் பலத்தை கொச்சைப்படுத்தியவர்கள் யார்?
ஹக்கிமுக்கும், குமாரிக்கும் இடையே விரும்பத்தகாத உறவு இருக்கின்றதென்று படம் காட்டியவர்கள் யார்?
மு.காவின் ஸ்தாபகத் தலைவரின் மரணத்தில் உள்ள மர்ம முடிச்சை இன்று வரைக்கும் அவிழ்க்க முடியாது இருப்பவர்கள் யார்?
சிறுபான்மையினரின் அரசியல் பலத்தை குழிதோன்றிப் புதைப்பதற்கு சமமான அரசியல் யாப்பில் 18வது சீர்திருத்தத்தை ஆதரித்துவிட்டு, அதனை தங்களின் வரலாற்று தவறு என்று விரல்களை கடித்துக் கொள்கின்றவர்களைப் போல் பாசாங்கு காட்டிக் கொண்டிருப்பவர்கள் யார்?
முஸ்லிம்களின் பறி போகும் காணிகளைப் பெற்றுக் கொள்வதற்கு சக்தியற்றவர்களாக இருந்து கொண்டு, காணி பற்றி பேசிக்போய்க் கொண்டிருக்கின்றார்கள். விடமாட்டோமென்று வெறும் அறிக்கைகளை விடுத்துக் கொண்டிருப்பவர்கள் யார்?
முஸ்லிம்களின் பள்ளிவாசல்களை தாக்கியவர்கள் சட்டத்திற்கு சவால்விடும் வகையில் பகிரங்கமாக சுற்றிக் கொண்டிருக்கின்றார்கள். அவர்களை கைது செய்வதற்கு பொலிஸில் ஒரு முறைப்பாட்டைக் கூட செய்யாது இருக்கின்ற அரசியல் தலைவர்கள் யார்?
சுனாமியால் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்காக அக்கரைப்பற்று நுரைச்சோலையில் சவுதி அரசாங்கத்தின் நிதியுடன் கட்டப்பட்ட சுமார் 450 இற்கும் மேற்பட்ட வீடுகளை முஸ்லிம்களுக்கு பெற்றுக் கொடுப்பதற்கு முயற்சிகளை எடுத்துக் கொள்ளாதிருப்பவர்கள் யார்?
விடுதலைப் புலிகளுடன் உடன்படிக்கை செய்து முஸ்லிம்களின் பாதுகாப்புக்கு உத்தரவாத்தைப் பெற்றுக் கொள்ளாதவர்கள் யார்?
அமைச்சர் பதவியை மாத்திரம் வேண்டி முஸ்லிம்களின் உரிமைகள் பறிபோய்க் கொண்டிருக்கும் இன்றைய நாள் வரைக்கும் மௌனமாக இருந்து கொண்டிருப்பவர்கள் யார்?
அரசாங்கத்தை போலியாக விமர்சனம் செய்து முஸ்லிம்களை ஏமாற்றிக் கொண்டிருப்பவர்கள் யார்?
அம்பாரையில் கரையோர மாவட்டத்தை பெற்றுக் கொள்ள முடியாது இருக்கின்றவர்கள் யார்?
அம்பாரை கச்சேரியில் மேலதிக செயலாளராக முஸ்லிம் ஒருவரை நியமிக்க வேண்டுமென்று கோரிவிட்டு, அதனை சாதித்துக் காட்ட முடியாதிருப்பவர்கள் யார்?
இவைகள் பாவ காரியம் இல்லையா?
இவ்வாறு முஸ்லிம் சமூகத்திற்கு பல வரலாற்றுத் துரோகங்களைச் செய்தவர்கள,; முஸ்லிம் வாக்காளர்களில்லை. முஸ்லிம் அரசியல் தலைவர்கள்தான் என்பதற்கு ஆதாரங்கள் இருக்கின்றன. இந்நிலையில், ஊவா மாகாண முஸ்லிம்கள், இரட்டை இலையில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு வாக்களிக்காது போனால், அதனைப் பெரும்பாவமென்று சொல்லுவது ஏற்க முடியாததாகும். ஒருவரை குறை சொல்லுவதற்கு முன்னர், தங்களின் முதுகை ஒரு தரம் திரும்பிப் பார்க்க வேண்டும். அது முடியாத காரியம் என நினைத்தால், உங்கள் முதுகு எப்படி இருக்கின்றதென்று அடுத்தவரிடம் கேட்டாவது தெரிந்து கொள்ள வேண்டும்.
முஸ்லிம்களின் அரசியல் பலமாகவும், குரலாகவும் திகழ்ந்த மு.கா சுயநலன்களுக்காக கூறுபோடப்பட்ட போது, முஸ்லிம் சிவில் அமைப்புக்கள் பலவும், முஸ்லிம் கட்சிகள் யாவும் ஒற்றுமைப்பட வேண்டுமென்று மாதக் கணக்கில் முயற்சிகளை எடுத்துக் கொண்ட போதிலும், ஒவ்வொரு கட்சியும், தலைவர்களும் ஒற்றுமைப்படுவதற்கு மறுத்தார்கள். தங்களின் இந்த மறுப்பு முஸ்லிம்களின் எதிர் காலத்தை சிதைத்துவிடுமென்று சிவில் அமைப்புக்கள் வலிறுத்திய போதிலும், அதனை யாரும் ஏற்றுக் கொள்ளவில்லை. அன்று அதனை ஏற்று ஒற்றுமைப்பட்டிருந்தால், இலங்கையில் முஸ்லிம்களுக்கு இன்றைய நிலை ஏற்பட்டிருக்காது. அளுத்கமஈ தர்கா நகர் சம்பவங்கள் கூட நடந்திருக்காது.
அன்று ஒற்றுமைப்படுவதற்கு மறுதலித்தவர்கள். முஸ்லிம்களின் அரசியல் பலத்தை சிதைத்தவர்கள். தலைக்கு மேலால் வெள்ளம் போகின்ற நிலையிலும், சமூகத்தின் நலனை கருத்தில் கொள்ளாது, முஸ்லிம்களின் கூட்டு எனத் தெரிவித்துக் கொண்டு, முஸ்லிம்களின் வாக்குகளை சிதறடிப்பதற்கு எடுத்துக் கொண்டிருக்கும் முயற்சியை ஒற்றுமை என காட்டுகின்றார்கள். இவர்களின் இந்நடவடிக்கை ஊவா மாகாண முஸ்லிம்களை மேலும் நெருக்கடிக்குள் தள்ளுவதற்குரிய ஒன்றாகும்.
ஊவா மாகாணத்தில் முஸ்லிம்களின் சார்பில் ஒரு மக்கள் பிரதிநிதியையாவது பெற்றுக் கொள்ள வேண்டுமானால், முஸ்லிம்களின் வாக்குகள் ஒரு கட்சிக்கு அளிக்கபட வேண்டும். ஆனால், முஸ்லிம்களின் வாக்குகள் பல கட்சிகளுக்கு அளிக்கப்படும் நிலையே காணப்படுகின்றது.
மேலும், இம்மாகாணத்தில் இன உறவு என்பது பாராட்டும் வகையிலில்லை. இங்கு இனங்களுக்கு இடையே ஒற்றுமையை கட்டியெழுப்ப வேண்டிய கட்டாயம் உள்ளது. குறிப்பாக முஸ்லிம்களுடன் ஏனைய இனத்தவர்கள் பல தடவைகள் முறுகல் நிலையை ஏற்படுத்தியுள்ளார்கள். இத்தகையதொரு நெருக்கடியுள்ள மாகாணத்தில், முஸ்லிம்கள் முஸ்லிம்களுக்குத்தான் வாக்களிக்க வேண்டுமென்று பிரச்சாரம் செய்யும் போது, அதனை இனவாதிகள் தங்களுக்கு சாதகமாகவே பயன்படுத்திக் கொள்வர்.
ஊவா மாகாணத்தில் முஸ்லிம்களின் வாக்காளர்களின் தொகை சுமார் 40 ஆயிரத்திற்கும் குறைவாக உள்ள நிலையில் தேசிய கட்சி ஒன்றில் முஸ்லிம் வேட்பாளர்கள் இரண்டு பேரை மாத்திரம் நிறுத்தி இருந்தால், அந்த இரண்டு பேரும் வெற்றி பெறுவதுடன், இனவாதிகளின் குரோத எண்ணங்களுக்கு ஆப்பாகவும் அமைந்திருக்கும். இதற்கு மாற்றமாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் மாத்திரம் முஸ்லிம் வேட்பாளர் நிறுத்தப்படாத நிலையில் ஐ.தே.க, துஆ என எல்லாக் கட்சிகளும் முஸ்லிம்களின் வாக்குகளை பிரித்துக் கொள்ளுவது, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கே அதிக நன்மைகளை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.
0 comments:
Post a Comment